5ம் திகிய கூட்டத்தினில் தீர்க்கமான முடிவு!

எதிர்வரும் 5ம் திகதி யாழ்ப்பாணத்தினில் கூடவுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளது கூட்டத்தினில் வடமாகாணசபை அமைச்சரவை மற்றும் கட்சியின் பதிவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பினில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டுமென தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
எனினும் யாழ்ப்பாணக்கூட்டத்தை இரத்துச்செய்ய அல்லது வவுனியா உள்ளிட்ட வேறு இடங்களிற்கு மாற்றம் செய்ய தமிழரசுக்கட்சி முழு அளவினில் முயல்வதாக தெரியவருகின்றது.
அண்மையினில் வடமாகாண முதலமைச்சருக்கும் கூட்டமைப்பின் தலைவருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி தான் யாழ்ப்பாணம் வருகை தரவள்ளதாக தெரிவித்ததுடன் அப்போது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளது தலைவர்களை அழைத்து கூட்டமொன்றை கூட்டி பிரச்சினைகளிற்கு முடிவு கட்டலாமென இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மீன்பிடி ,போக்குவரத்து அமைச்சரான பா.டெனீஸ்வரனை அப்பதவியிலிருந்து தூக்கி விந்தன் கனகரட்ணத்தை அப்பதவியிலமர்த்த தமிழீழ விடுதலை இயக்கம் மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.அவ்விடயம் தொடர்பினில் தமிழீழ விடுதலை இயக்க தலைமை முதலமைச்சரை நெருக்கி வருகின்ற நிலையினில் 5ம் திகதிய கூட்டம் வரை அதனை பிற்போட முதல்வர் முற்பட்டுள்ளார்.
இந்நிலையினில் அமைச்சர்களான பா.டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோரை காப்பாற்ற போராடிவரும் தமிழரசுக்கட்சி ஒகஸ்ட் 5ம் திகதிய கூட்டத்தை தவிர்க்க முற்படுவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.திட்டமிட்டபடி 5ம் திகதி கூட்டம் கூட்டப்பட்டால் டெனீஸ்வரன் பதவி துறப்பது நிச்சயமென சொல்லப்படுகின்றது.
இன்னொரு புறம் தமிழரசுக்கட்சி மக்களிடையே மோசமான அவப்பெயரை சந்தித்துள்ள நிலையினில் தற்போது முதலமைச்சர் மற்றும் அவரது ஆதரவு பங்காளிக்கட்சிகள் பலமாக உள்ள நிலையினில் தமது குரல்கள் எடுபடமாட்டாதென மாவை சேனாதிராசாவை சிறீதரன்,சரவணபவன் தரப்புக்கள் நச்சரித்துவருவதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே விரைவினில் பங்காளிக்கட்சிகளது கூட்டம் கூட்டப்பட்டு ஆக்கபூர்வமான மடிவு எடுக்கப்படாவிட்டால் முதலமைச்சர் சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டுமென அவரது ஆதரவு தரப்புக்கள் நெருக்குவாரங்களை பிரயோகித்துவருகின்றன.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila