மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகளையும் தத்தெடுத்தார் இளஞ்செழியன்

யாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த

மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.



தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை இன்று (புதன்கிழமை) அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது.

நீதிபதியை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கருதப்படும் நிலையில், நீதிபதியின் உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை நீத்த தனது மெய்ப்பாதுகாவலருக்கு செய்யும் கடமையாக தான் இதனை கருதுவதாக நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், குறித்த இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல பராமரித்து, அன்பு செலுத்தி, கல்வியை போதித்து, தான் இறக்கும்வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila