வட மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய கலந்துரையாடலொன்று வவுனியாவில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்றையதினம் மாலை விருந்தினர் விடுதியொன்றில் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலின்போது கூட்டு எதிர்க்கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக இன்றைய கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் சுமதிபால, இடதுசாரி முன்னணி கட்சி, ஈ.பி.டி.பி கட்சி, இணைந்த வடக்கு, கிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யசோதரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.