அரியாலை கொலையாளிகளை காப்பாற்றும் கொழும்பு!

2

அரியாலை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர் அதிரடிப்படையினரை கைது செய்யவிடாது கொழும்பிலிருந்து அரச உயர்மட்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தினில் தொடர்புடைய ஜந்து அதிரடிப்படையினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் யாழ்ப்பாணத்தின் பண்ணை பகுதியிலுள்ள விசேட அதிரடிப்படையின் முகாமிலிருந்து செயற்பட்டுள்ளனர்.
இதனிடையே அவர்களால் கொலை நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி,முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விசேட காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.எனினும் துப்பாக்கி சூட்டினை நடத்திய அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினை சேர்ந்த எவரும் கைதாகியிருக்கவில்லை.
கொழும்புத்துறையின் உதயபுரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இனந் தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த டொன் பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞர் படுகாயமடைந்திருந்தார்.எனினும் சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே அவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் உயிரிழந்திருந்திருந்தார்.
3இந்த விடயம் தொடர்பாக இலங்கை படையினர் மீது சந்தேகம் எழுப்பப் பட்ட நிலையில் பல கோணங்களில் விசாரணைகள் இடம் பெற்று வந்திருந்தது. அதனடிப்படையில் விசேட அதிரடிப் படையினரின் மேல் சந்தேகம் திரும்பியதை அடுத்து, பண்ணையில் அமைந்துள்ள அவர்களுடைய முகாமினுள், நடத்திய சோதனையின் போது தடய பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.
எனினும் காவல்துறை அதிபர் துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய அதிரடிப்படையினரை கைது செய்ய அனுமதிக்காது இழுத்தடிப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila