கற்பனைகள் பல. அதில் பாராளுமன்றக் கட்டிடம் பேசினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தோம்.
உண்மையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகின்ற அத்தனை வார்த்தைகளை யும் அப்படியே உள்வாங்கிக் கொண்ட பெருமை பாராளுமன்றக் கட்டிடத்தையே சாரும்.
சுவருக்கும் காது உண்டென்றொரு பழமொழி நம் தமிழ் மொழியில் உண்டல்லவா?
அவ்வகையில் பாராளுமன்றக் கட்டிடமும் பாராளு மன்ற உரைகள், ஆற்றுகின்ற வாதப்பிரதிவாதங் கள், சண்டைகள், தகாத வார்த்தைப் பிரயோகங்கள், நளினங்கள், நகைச்சுவைகள் என அனைத்தையும் உள்வாங்கி வைத்துள்ளது என்ற அடிப்படையில் பாராளுமன்றக் கட்டிடம் பேசினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தோம். இதோ அந்தக் கற்பனை.
இலங்கை மாதாவின் மேதகு மக்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள் என்றறிந்திருந்த உங்களுக்கு இன்று பாராளுமன்ற கட்டிடமாகிய நான் பேசுகிறேன் என்றதும் உங்களுக்கு வியப்பாக இருக்கும். எனினும் எனக்கும் பேசுகின்ற அதிகாரமும் தகைமையும் உண்டு.
ஏனெனில் நீங்கள் வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்ற பிரதிநிதிகள் ஒவ் வொருவரும் என்ன பேசுகிறார்கள்? எப்படிக் கதைக்கிறார்கள்? எப்படிக் குறட்டை விடுகிறார்கள்? என்ற அனைத்தும் அறிந்தவன் நான்.
எனவே நான் பேசுவதற்குத் தகைமை உடையவன். என்னைப் பொறுத்தவரை எனக்கு இருக்கக்கூடிய கவலையயல்லாம் இலங்கை மக்களாகிய உங்களை நினைத்துத்தான்.
இதை நான் கூறும்போது அரசியல்வாதிகளுடன் இருந்து நீரும் நடிக்க கற்றுக் கொண்டீர் போலும் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்பதும் எனக்கு தெரியும். நான் அரசியல்வாதிக ளுடன் இருந்தாலும் இந்த நாட்டு மக்களின் சபை.
எனவே அரசியல்வாதிகளின் பழக்கவழக்கம் என்பதைவிட மக்களின் நன்மையும் நலன் களும் பற்றியே என் கருசனை என்றும் இருந் துள்ளது. இதனால்தான் நான் சொல்கிறேன். இலங்கை மக்கள் பாவம் என்று.
நாட்டுக்கு நன்மை செய்வார்கள் என்று நீங் கள் அனுப்பி வைக்கும் பாராளுமன்றப் பிரதி நிதிகள் எப்படியயல்லாம் திருகுதாளம் போடுவார் கள் என்பதை நான் நேரில் கண்டுள்ளேன்.
என்ன செய்வது நீங்கள் நம்பி அனுப்பி வைக்க அவர்கள் எப்படியயல்லாம் செயற்படு கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்தால் அடுத்த தேர்தலில் வாக்களிக்கவே மாட்டீர்கள்.
அன்புக்குரிய மக்களே! நான் முன்னைய வர்களையும் பார்த்திருக்கிறேன். சமகாலத்த வர்களையும் கண்டிருக்கிறேன்.
முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்களி டம் நேர்மை, நீதி இருந்தது. இன்று அதனைத் தேடியும் காணவில்லை.
அதிலும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் களை நான் அவதானிக்கின்றேன். ஒரு காலத் தில் தந்தை செல்வநாயகம், தளபதி அமிர்தலிங் கம் ஆகியோரின் பாராளுமன்ற உரைகளைக் கேட்டு நான் அதிர்ந்ததுண்டு. அவர்களின் உரைகளைக் கேட்கும்போதெல்லாம் தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைப்பேன்.
ஆனால் இன்று நிலைமை வேறுவிதமா யிற்று. தமிழ்த் தலைவர்கள் பேசுவதைப் பார்த்து சிங் களவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்வதைத்தவிர வேறு எதுவுமில்லை.
தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் பெளத்த சிங்களத் துக்காகக் குரல் கொடுக்கின்றனர். இது ஏன்? எதற்கு? என்பது எனக்குத் தெரியவில்லை.
ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந் தர் ஐயா உண்மையில் தமிழ் மக்களின் எதிர்க் கட்சித் தலைவராகவே இருக்கிறார். அவரை சிங்கள மக்கள் எதிர்க்கட்சித் தலைவராகப் பெற்றது பெரும் பேறு என்று சொல்லுவேன்.
சரி சரி, மணி ஒலிக்கிறது. அடுத்த அமர்வு. காது கொடுத்து கேட்க வேண்டும். ஆகையால் நேரம் வரும்போது மீண்டும் உங்களுடன் பேசுவேன்.


