தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை... என்பது மணிவாசகரின் வார்த்தை.
இதை நாம் கூறும்போது, ஐயா எல்லாம் மறந்து மணிவாசகர்போல் ஆனந்தமனோ நிலையில் இருக்கிறீர்களோ! என்று நீங்கள் யாரேனும் கேட்டால் அப்படியேதும் இல்லை.
தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை... என்று மணிவாசகர் கூறிய நிலைமை இப்போது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் விரும்புவது தமிழ் அரசியல் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதுதான்.
இந்த விருப்பத்தை தமிழ் மக்களே நிறை வேற்றக்கூடிய சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது.
அன்புக்குரிய தமிழ் உறவுகளே! நீங்கள் எதிர்பார்த்த தமிழர் அரசியல் ஒற்றுமை என்பது சாத்தியப்படாமல் போனமைக்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால், ஒரு தரப்பு அரசியலை, நாம் முழுமையாக நம்பியிருந்ததுதான்.
அதாவது அவர்கள் செய்வார்கள்; அவர் கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, அந்த ஒரு தரப்பு தன்னை வளர்த்துக் கொள்ள முற்பட்டது.
இதன் விளைவு தமிழினத்தின் உரிமைகள், அபிலாசைகள் என அனைத்தும் அடிபட்டுப் போய்; அந்த அரசியல் தரப்பிலும் வல்லமை மிக்கவர்களின் கை ஓங்கியது.
இதன் விளைவாக இன்று தமிழ் அரசியல் தலைமை எங்கே நிற்கிறது. யாருடைய பக்கத் தில் நிற்கிறது. இவர்களை நம்ப முடியுமா? என்ற ஏக்கம் தமிழ் மக்களைப் பற்றிக் கொண் டுள்ளது.
இவ்வாறான ஒரு அரசியல் சூழமைவு ஏற் பட்டுள்ள இவ்வேளையில், அதனை நிவர்த்தி செய்து அரசியலை திருத்தி அமைக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் மீண்டும் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.
ஆம், பிரிட்டிஷ் பிரதமராக இருந்த மார்க் கிறட் தட்சர் அவர்கள் கூறிய கருத்து இது; எல்லா நாடுகளிடமும் ஆயுத பலம் இருப்பதால் தான் யுத்தம் இல்லாமல் இருக்கிறது.
மார்க்கிறட் தட்சரின் இக்கருத்து மிகவும் ஆழமானது. அவரின் அதே கருத்தின் வழி, தமிழ் மக்களும் ஒரு தரப்பு அரசியலை மட்டும் நம்பியிராமல்; நேர்மையான - ஆளுமையான - ஐ.நா சபை வரை சென்று குரல் கொடுக்கத் தக்கதான இன்னொரு தமிழ்த் தலைமையை பலம்மிக்கதாக ஆக்க வேண்டும்.
இவ்வாறு ஆக்கும்போது இயல்பாக ஒற் றுமை ஏற்படும் என்பது சர்வநிச்சயம்.
இதை விடுத்துபலமானவரை திரும்பவும் பலமாக்கும்போது தமிழரின் அரசியல் என்பது சர்வாதிகாரமாகி அகத்திலும் புறத்திலும் ஒரு சிலரின் ஆதிக்கம் மேலோங்கும்.
இந்த நிலைமையை மாற்றி அங்கே நீங் கள்; இங்கே இவர்கள் என்று ஒரு சமச்சீரான பலத்தை வழங்கும்போது, நீங்கள் எதிர்பார்த்த தமிழ் அரசியல் ஒற்றுமை தானாக வந்து சேரும்.
இதைச் செய்வது தமிழ் மக்களாகிய உங்க ளிடம் இருப்பதால் நீங்களே அதைச் செய்து முடியுங்கள்.