பெரும்பான்மை இனத்துக்கும் சிறுபான்மை இனத்துக்குமிடையிலான ஒற்றுமையீனம் இலங்கையில் நீடிக்கும் என்று சொல்வதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை.
இதற்கு அண்மையில் கண்டியில் நடந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவர வன்மத் தைச் சாட்சிப்படுத்தலாம்.
இது ஒருபுறம் இருக்க, சிறுபான்மை இனங் களுக்கிடையிலான வன்மங்களும் குறித்த ஒரு சிறுபான்மை இனம் தனக்குள் பிரிந்து நின்று சர்ச்சைப்படுகின்ற சந்தர்ப்பங்களுக்கும் நிறையவே இடமுண்டு எனலாம்.
இந்தச் சந்தர்ப்பங்கள் சமயத்தினூடாக நடக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும்.
அண்மையில் கிளிநொச்சிப் பகுதியில் மூன்று இந்து ஆலயங்கள் சேதப்படுத்தப்பட் டுள்ளன.
இதற்கு முன்னரும் இந்து ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடியும். இச்சம்பவத்தை செய்பவர்கள் யார்? என்று ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு வல்லமை பொருந்தியவர் கள் யாருமில்லை எனலாம்.
ஒருபுறத்தில் இந்து ஆலயங்கள் சேதப் படுத்தப்படுகின்ற அதேநேரம், மறுபுறத்தில் வட மாகாணம் முழுவதிலும் கடவுள் சிலைகளை நிறுவுவதில் குறித்த சில சமயங்கள் கடும் பிரயத்தனம் செய்கின்றன.
இத்தகையை மதவாதம் தமிழ் மக்களின் ஒற்றுமையையும் பலத்தையும் தகர்த்தெறியும் என்பதால், இது தொடர்பில் உள்ளூராட்சி அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.
அதேநேரம் 2009ஆம் ஆண்டிலும் அதற் குப் பின்னரும் வீதி ஓரங்கள், சந்திகள் மற்றும் பொதுஇடங்களில் நிறுவப்பட்ட கடவுள் சிலை களை அகற்றுவதற்கான தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை கொண்டு வந்து அதனை அமுலாக்குவது அவசியமாகும்.
அத்துடன் எதிர்காலத்தில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்படும் கோயில்கள், தேவாலயங் கள், பள்ளிவாசல்கள், பெளத்த விகாரைகள் மற்றும் சந்திகள், வீதிகளில் சொருபங்களை அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகவும் இத்தகைய நடவடிக்கைகள் மதவாதத்தை தூண்டுகின்ற செயலாகவும் கருதப்பட வேண்டும்.
அதேவேளை புதிதாக வழிபாட்டுத் தலத்தை அமைப்பதற்கு யார் விண்ணப்பித்தாலும் அவர் கள், வீடற்ற பத்துக் குடும்பங்களுக்கு பத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கின்ற நிபந்தனையை ஏற்கின்றவர்களாக இருக்க வேண்டும் என்ப துடன், புதிதாக வழிபாட்டுத் தலங்களை அமைக் கின்ற விடயத்தில் மிகவும் இறுக்கமான நடை முறைகள் பின்பற்றப்பட்டு ஒரு விசேட குழுவின் பரிந்துரைக்கு அமைவாக அனுமதி கொடுக்கப் படுகின்ற நடைமுறையை அறிமுகப்படுத்துவ தும் கட்டாயமானதாகும்.
எதுஎவ்வாறாயினும் 2009ஆம் ஆண்டுக் குப் பின்னர் வீதிகளின் ஓரங்களில், சந்திகளில், பொதுஇடங்களில் அமைக்கப்பட்ட கடவுள் சொருபங்களை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இல்லையேல் மிக விரைவாக வடபுலத்தில் மதக் கலவரம் வெடிப்பதற்கான வாய்ப்புள்ளது.