நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை....



நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கினேன்!
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்குட்படுத்துமாறு கோரி வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு நேரில் வழங்கியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவாஜிலிங்கம் இதனை ​தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்திற்குள் நம்பிக்கை தரும் வகையில் இலங்கை அரசாங்கம் ஒன்றையுமே செய்திருக்கவில்லை.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதி பொறிமுறைக்கு உட்படுத்துமாறுகோரி வடமாகாணசபையில் ஏகமனதாக தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் மின்னஞ்சல் மற்றும் தபால் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதன் ஒரு பிரதியை கடந்த 9ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு நேரில் வழங்கியுள்ளேன்.
வடமாகாணசபையின் தீர்மானத்தை வழங்கும்போது ஆணையாளருடன் ஒரு நிமிடம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.
அப்போது இலங்கை அரசுடன் இணங்கி நிறைவேற்றிய 30:01 தீர்மானத்தில், இலங்கை அரசு இணங்கியிருந்த 36 நிபந்தனைகளில் ஒன்றான மீள நிகழாமை என்ற நிபந்தனை அப்பட்டமாக மீறப்படுகின்றது.
எனவும் அதற்கு கண்டியிலும், அம்பாறையிலும் இஸ்லாமிய மக்கள் மீது இடம்பெற்ற வன் செயல்களை சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதனடிப்படையில் சிறுபான்மை இனங்கள் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான வன்செயல்களை கட்டவிழ்த்து வருகின்றது என சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
அதேபோல் 9ம்திகதி காலை பொதுச்சபை கூட்டத்தில் பேசுவதற்கு ஒரு நிமிடமும் 30 செக்கன்களும் வழங்கப்பட்டது.
அப்போது இலங்கை அரசாங்கம் தாமும் இணங்கி நிறைவேற்றிய 30:01 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என சொல்கிறது.
குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் அப்பட்டமாக அதனை கூறிவருகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
எனவே இலங்கை அரசை ஒரு சர்வதேச நீதி பொறிமுறைக்கு உட்படுத்துமாறும், ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளேன்.
மேலும் வடமாகாணசபையின் தீர்மானம் வடமாகாணத்தில் வாழும் 11 லட்சம் மக்களுடைய நிலைப்பாடாக உள்ளது.
அதனடிப்படையில் 26ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்பிக்கவுள்ள அறிக்கையில் வடமாகாணசபையின் தீர்மானம் பெரிதும் தாக்கம் செலுத்தும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila