புத்தளம்- ஆனமடுவ மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடு ஆகியன மீது இரு பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குருணாகல் - புத்தளம் பிரதான வீதியில் ஆனமடுவ நகரில் அமைந்துள்ள மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீதும், முதலாவது தாக்குதல் கடத்தப்பட்டுள்ளது.
|
அளுத்கம - தர்கா நகர், அதிகாரிகொடவில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றின் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவங்களின் போது எவருக்கும் ஆபத்துக்கள் நேராத போதும் ஹோட்டலும், வீடும் முற்றாக தீக்கிரையாகி கடும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.
|
முஸ்லிம்களைக் குறிவைத்து ஆங்காங்கே தொடரும் தாக்குதல்கள்!
Add Comments