வடக்கிலும் கிழக்கிலும் காணா மற்போனோர் பற்றிய அலுவலகங் கள் குறைந்தது நான்கையேனும் நிறுவி அங்கு அந்த மக்கள் யாரு டைய இடைஞ்சலும் இல்லாமல் குறிப்பாக புலனாய்வுத் துறையினரு டைய இடைஞ்சல்கள் இல்லாமல் சர்வதேச மேற்பார்வையோடு சுத ந்திரமாகத் தங்களுடைய சாட்சிய ங்களை அளிப்பதற்கு வழிசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி னர் சிவஞானம் சிறீதரன் தெரிவித் துள்ளார்.
பாராளுமன்றத்தில் இது தொடர் பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இறுதிப் போரில் இராணுவத்தின ரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் கையளி க்கப்பட்டவர்கள் குறித்து ஆதாரங்கள் வெளி யிடப்பட்ட போதிலும் அவர்களுக்கு என்ன நட ந்தது என்பதை இதுவரை இலங்கை அரசு வெளிப்படுத்தவில்லை, அதனை முதலில் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறு த்தியுள்ளார்.
இந்த நாட்டிலே வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டவர்கள் சம்பந்தமான விடயங்களை வெளியிலே கொண்டுவருவத ற்கான சர்வதேச சமவாயச் சட்டமூலம் இந் தச் சபையிலே சமர்ப்பிக்கப்பட்டதையிட்டு முதலிலே நன்றியைத் தெரிவித்துக் கொள் கின்றேன். அதேநேரம் இதனைக் கொண்டு வருவதற்குக் கிட்டத்தட்ட இரண்டரை வருட ங்கள் எடுத்திருக்கிறது என்பது மிகவும் கவ லைக்குரியது. இந்த நாட்டிலே அதிகமா னோர் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப் பட்டார்கள்.
குறிப்பாக வடக்கு- கிழக்கு வாழ் தமிழர் கள் 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராக மனித நேயத் தோடும் ஜனநாயக முறைப்படியும் முன்னெ டுத்த போராட்டங்கள் எல்லாம் ஆயுத முனை யில் அடக்கப்பட்டன. அந்த மக்கள் ஆயுத ரீதி யாகத் தாக்கப்பட்டனர்; அந்தநேரத்தில்தான் அவர்கள் துப்பாக்கிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த நிலை மையை அரசுதான் அவர்கள்மீது திணித்தது.
அதன் பின்னர் நீண்ட பெரும் போரா ட்டத்துக்கு மத்தியில் 2009ஆம் ஆண்டிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொ ழிக்கப்பட்டார்கள்;. ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள். இந்த நாட்டிலே இதனை விசாரிப்பதற்காகப் பல்வேறுபட்ட ஆணைக்குழுக்களை அரசாங்கம் நிய மித்தது.
குறிப்பாக தமிழர்கள் மீதான ஓர் இனப் படுகொலையை மேற்கொண்ட மகிந்த ராஜ பக்ஷவும் அவருடைய சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவும் இந்த நாட்டிலே செய்த அதிபய ங்கரமான யுத்தம் மற்றும் கொடூரமான கொலைகளினால் பல்வேறுபட்டவர்களும் காணாமலாக்கப்பட்டார்கள்.
இந்த நாட்டிலே இருக்கின்ற இனப்பிரச் சினை தீர்க்கப்பட வேண்டும்; இந்த நாட்டிலே நடந்திருக்கின்ற பிரச்சினைகளுக்கான தீர் வைச் சரியான முறையில் அணுக வேண் டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விடயங்களைக்கூட அர சாங்கம் கிஞ்சித்தும் தன்னுடைய கவனத் திலே எடுக்கவில்லை. பின்னர் மேலும் ஏமா ற்றுவதற்காக முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலே ஜனாதிபதி ஆணைக்குழுவை உருவாக்கியது.
ஆனால், இந்த ஜனாதிபதி ஆணைக் குழுவானது மக்களிடம் விசாரணை செய்த நேரத்தில் உங்களுக்கு ஆடு தரவா? கோழி தரவா? என்று இளக்காரமான முறையில் கேட்டதே தவிர, சரியான முறையில் நீதி யைத் தரவில்லை.
இவற்றையெல்லாம் கடந்து 2011- 2015 வரையில் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட தீர்மானங்களு க்கமைவாக, 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜெனிவாப் பிரகடனத்தின் 30(1)இன் கீழுள்ள சகல விடயங்களையும் இலங்கை ஏற்றுக்கொண்டது.
அப்பொழுது வெளிநாட்டமைச்சராக இரு ந்த மங்கள சமரவீர, காணாமற்போனோர் தொடர்பில் காரியாலயம் அமைக்கின்றோம்; அவர்கள் தொடர்பில் உடனடித் தீர்வைக் கொண்டுவருகின்றோம்; அவர்களைக் கண் டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கின் றோம்; நீதியை வழங்குகின்றோம் என்று கூறினார்.
ஆனால், இரண்டரை வருடங்கள் கடந் தும் இதுவரை அந்த நீதி நிலைநாட்டப்பட வில்லை. இந்த நிலையில் இன்றைய நாளில் இந்தச் சட்டமூலம் விவாதிக்கப்படுகி ன்றது. அதற்கான ஆணையாளர்கள் நியமி க்கப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் எங்கே குறித்த அலுவ லகம் அமையும்? கொழும்பிலே அமைந்தால், வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்றவர்கள் எவ்வாறு கொழும்புக்கு வந்து உரிய சாட்சி யங்களையும் மற்றும் விடயங்களையும் முன்வைப்பார்கள்? எனவே, வடக்கிலும் கிழக்கிலும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகங்கள் குறைந்தது நான்கையே னும் நிறுவி அங்கு அந்த மக்கள் யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் குறிப்பாக புலனாய் வுத்துறையினருடைய இடைஞ்சல்கள் இல்லாமல், சர்வதேச மேற்பார்வையோடு சுதந்திரமாகத் தங்களுடைய சாட்சியங் களை அளிப்பதற்கு வழிசெய்ய வேண்டும்.
தலைமைதாங்கும் உறுப்பினரே இதிலே சர்வதேசத்தினுடைய கவனிப்பு மிகமிக முக் கியம். குறிப்பாக, அமெரிக்கா கூடிய கரிச னையைச் செலுத்த வேண்டும்; பிரித்தானியா அதன் கரிசனையைக் காட்ட வேண்டும்; இந் தியா தன்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும்.
அதாவது, இந்த விடயத்திலே வெளிப்படை யான விசாரணை நடைபெறுவதற்கு ஐரோ ப்பிய நாடுகள் உதவ வேண்டும். ப்பயர் சூன் என்று சொல்லப்படுகின்ற இடத்திலிருந்து போர் நிறுத்தம் செய்யப்பட்ட வலயங்களு க்குள் செல்லுமாறு மக்களிடம் கூறப்பட்டதன் பின்னர் அங்கு கொல்லப்பட்ட மக்களுக்கு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
தங்களுடைய பிள்ளைகளை ஒப்படைத்த பெற்றோர், கணவனை ஒப்படைத்த மனை விமார், தங்களுடைய தாய், தந்தையரை ஒப்படைத்த பிள்ளைகள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் போராட்டத்திற்கு ஒரு வருடம் முடிந்திரு க்கின்றது.
ஆனால், இந்த நாட்டிலே யாருடைய கண்ணுக்கும் அவர்களின் நிலைமை தெரி யாதிருப்பது நியாயமல்ல. அவர்களுக்கு அத ற்கான நீதி இன்னமும் கிடைக்காமையால் தொடர்ந்தும் பேராடிக்கொண்டிருக்கின் றார்கள். ஆகவே, இவர்களுக்கு நீதி கிடை க்க வேண்டுமானால் சர்வதேசத்தினுடைய மேற்பார்வையின்கீழ், சர்வதேச சமூகத்தி னுடைய பிரசன்னத்தோடு இந்த விடயம் விசாரிக்கப்பட்டு நியாயம் வழங்கப்பட வேண்டுமென்று நான் குறிப்பிடுகின்றேன்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா இந்த விடயங்களிலே மேன்மேலும் - கூடுத லாகத் தங்களுடைய கரிசனையைக் காட்ட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியு றுத்துகின்றோம். மிக முக்கியமாக, இவ்வாறு காணாமற்போனவர்களுடைய குடும்பங்க ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். குறிப்பாக பாதிரியார் பிரான்ஸிஸ் தலைமையிலே 48 இற்கும் மேற்பட்டவர்கள் சரணடைந்திருந் தார்கள். அவர்களைக் கொண்டுசென்ற வாக னம் எங்கே? அவர்கள் எங்கே?
விடுதலைப் புலிகளினுடைய மூத்த உறு ப்பினர் பாலகுமாரனுடைய மகன் இராணு வக் கட்டுப்பா ட்டுப் பகுதிக்குள் வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அந்த அடையாள ங்களை லங்கா கார்டியன் பத்திரிகை வெளி யிட்டது. பி.பி.சியின் முன்னாள் செய்தியா ளர் பிரான்சிஸ் ஹரிசன் தன்னுடைய டுவீ ட்டர் பக்கத்திலே வெளியிட்டிருந்தார். இவை யெல்லாம் நடந்தும்கூட இந்த நாட்டிலே நீதி கிடைக்கவில்லை.
சரணடைந்த புலித்தேவனும் அவரோடு சென்ற அரசியல் பொறுப்பாளர் நடேசனும் கொல்லப்பட்டார்கள். இவ்வாறாக மிகுந்த அநியாயங்கள் இந்த நாட்டிலே நடந்தன. மிகக் கொடூரமாக நடந்த அந்த யுத்தத்திலே அந்த மக்கள்மீது யுத்தக் குற்றங்கள் புரியப் பட்டன. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை குறிப்பிட்டதுபோல 2009ஆம் ஆண்டிலே ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் காணாமற்போயும் இருக்கின்றார்கள்.
எனவே அரசாங்கம் 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சர்வதேசச் சட்ட வல்லுந ர்களின் - நீதியாளர்களின் உதவிகளை ஏற் றுக்கொள்வதாகக் கூறியதன் பிரகாரம் இதனை விசாரித்து அந்த மக்களுக்கு நீதியை வழங்கவேண்டும் என்றார்.