இன வன்மச் சேற்றில் இருந்து இலங்கை மீள்வது எப்போது?

 காலத்துக்கு காலம் இலங்கையில் நடக் கும் இன வன்மச் செயல்கள் அழகான இலங் கைத் தீவைப் பாழாக்கி வருகிறது.

உலகின் சிறிய நாடான இலங்கையில் மூவின மக்களே வாழ்கின்றனர். மூவின மக் களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான கட்ட மைப்புக்கள் இந்நாள்வரை உருவாக்கப்பட வில்லை என்பது மிகத் தெளிவான உண்மை.
அண்மையில் அம்பாறையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகச் சிங்களத் தரப்புகள் மேற்கொண்ட வன்செயலைத் தொடர்ந்து நேற்று கண்டியில் சிங்கள - முஸ்லிம் மக்களி டையே வன்செயல் கட்டவிழ்த்து விடப்பட்டுள் ளது.
இன்றிருக்கக்கூடிய நவீன தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் ஊடாக வன்செயல் சம்ப வங்கள் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டிருப் பதைப் பார்க்கும்போது, இதயம் கருகி விடும் போல் உள்ளது.

அந்தளவுக்கு இன வன்மம் வேகம் கொண் டெழுந்ததைப் பார்க்க முடிந்தது.
இத்தகைய வன்செயல்கள் எந்த நேரத்தி லும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர் களைக் காவு கொள்ளும் என்பதுடன் கோடிக் கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களை யும் நாசம் செய்துவிடும்.

எனவே வன் செயலுக்கான காரணம் என்ன? என்ற கேள்விக்கு முன்பாக, தனி மனித அல் லது குழுநிலையிலான சண்டை சச்சரவுகள் விடயத்தில் பொலிஸ் தரப்பும் நீதிபரிபாலனமும் மிகவும் இறுக்கமாகச் செயற்படுவது கட்டாய மானதாகும்.

இனப்பாகுபாடு சார்ந்த தனி மனித அல்லது குழுநிலையிலான மோதல் சம்பவங்கள் அல் லது தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலி ஸாரும் நீதிபரிபாலனமும் எடுக்கின்ற நடவடிக் கைகள் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத் துவதாக இருப்பது அவசியம்.
இல்லையேல் பாதிக்கப்பட்ட தரப்பு தானே தண்டனை வழங்க முற்படும்.

இத்தகைய நிலைமை மிகவும் ஆபத்தா னது என்பதுடன் இத்தகைய சம்பவங்களே இன வன்மத்துக்கு வழிவகுப்பதாகவும் இருக் கின்றன.

ஆகையால் இன, மத, மொழி பேதமின்றி பொலிஸாரும் நீதிபரிபாலனமும் செயற்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
அதேநேரம் இன வன்மங்கள் ஏற்படக் கூடிய சூழ்நிலைகளை அறவே துடைத்து எடுப் பதன் பொருட்டு இன நல்லுறவு அமைப்புக் களை நாடு பூராகவும் உருவாக்குவதுடன் இன வன்மத்துக்கு எதிராகக் கடும் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.

எதுஎவ்வாறாயினும் கண்டியில் ஏற்பட்டு ள்ள சிங்கள - முஸ்லிம் வன்செயல் உடனடி யாக தடுக்கப்படுவதற்கான அத்தனை ஏற்பாடு களும் செய்யப்படுவதுடன், 
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு களும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.   
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila