
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கண்ணீரில் வரையும் கருணை மனு விண்ணப்பம்!"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
சச்சியானந்தம் ஆனந்த சுதாகரனுக்கு தாங்கள் உடனடியாகவே பொது மன்னி ப்பு அளித்து இரு அனாதைக் குழந்தைகளின் வாழ்வில் ஒளியூட்டுங்கள். தமி ழர்களைப் பொறுத்த வரையில் மட்டுமல்ல மனித நியாயத்தின்; நேயத்தின் அடிப்படையில் வாழும் இலங்கை மக்கள் அனைவரும் கண் கலங்கிடும் நிக ழ்வுதான் இது.
கிளிநொச்சியை சேர்ந்த இந்த மனிதர் மகசீன் சிறையில் நீண்ட காலமாக கைதியாக தடுத்து வைக்கப்பட்டு ள்ளார். இவரது மனைவியும் இரு குழ ந்தைகளும் கிளிநொச்சியில் பொறு மையோடும், மிகுந்த நம்பிக்கையோ டும் வறுமையில் வாழ்ந்து வந்தா ர்கள்.
காலத்தின் கொடுமையால் தாய் திடீரென நோயினால் மரணித்துப் போய்விட குழந்தைகள் இருவரும் தம்மை ஆதரிக்க யாருமின்றி இன்று அனாதரவாக நிற்கின்றார்கள். பெற்றோர் இன்றித் தவிக்கும் இவ்விரு குழந்தைகளுக்காக என்றாலும் இவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டியவரே.
2008 இலிருந்து தசாப்த காலமாக அரசியல் கைதியாகச் சிறைப்பிடிக்கப்பட்ட இவர்; ஆயுள் கைதியாகி மகசீன் சிறைச்சாலையில் இருந்து வரும் நிலையில் இரு குழந்தைகளையும் அனாதரவாக இவ்வுலகில் தங்களின் நாட்டில் பரித விக்க விட்டு விட்டு இவரது மனைவி கடந்த 15.03.2018 அன்று இறந்து விட்டார்.
மூன்று மணி நேரமே கால அவகாசம் வழங்கப்பட்டு மனைவியின் மரண ச்சடங்கில் கலந்து கொண்ட இவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீண்டும் திரும்பிச் சிறைக்குச் செல்கையில் அவரின் பெண்குழந்தையும் சிறைச்சாலை வண்டியினுள் தந்தையுடன் ஏறியது அனைவரையும் கண்ணீர் சிந்தி அழ வைத்தது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நிச்சயமாக இக்குழந்தைகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்வார் என்ற மேலான நம்பிக்கையுடன் இந்தக் கருணை கோரும் மனுவை உலகப் பொதுத்தளமான முகநூலில் நான் வெளியிடு கிறேன்.
சகல இலங்கை மக்களும் இன மத பிரதேச மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் இக்கருணை மனு தொடர்பாக மனிதாபிமானத்துடன் தாமாக முன்வந்து சச்சியானந்தம் ஆனந்த சுதாகரனுக்கு மேதகு ஜனாதிபதி அவர்கள் உடனடியா கவே பொது மன்னிப்பை வழங்கி அநாதரவாகியுள்ள இரு குழந்தைகளின் எதிர்கால நலன்களைக் கருத்திற் கொண்டு இவரை விடுதலை செய்யும்படி தமது கருத்துக்களையும், விருப்பங்களையும் இப்பதிவில் தயவாக வெளிப்படு த்தி மேதகு ஜனாதிபதி அவர்களின் கவனத்தை ஈர்க்குமாறு மிகவும் வினயமா கவும் வேண்டிக் கொள்கின்றேன்.

"அனாதைகளை ஆதரித்து இரக்கங் காட்டியவரும், நானும் மறுமையில் இவ்வாறு இருப்போம்" என இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் ஒன்று சோ்த்துக் காட்டி உலக மக்களுக்கு உபதேசம் செய்துள்ளார்கள்.
மிக்க நன்றியுடன்,
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
அகில இலங்கை சமாதான நீதவான்
காத்தான்குடி 06
18.03.2018