சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தனக்கு கிடைப்பதை ராஜபக்சவாதிகள் எதிர்த்ததாகவும், அமைச்சு பதவி வழங்கப்பட்ட விதம் குறித்து அதிருப்தியடைவதாகவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
|
உரிய இடத்தில் உரிய தலைமைத்துவம் இல்லாத காரணத்தினாலேயே கண்டியில் வன்முறைகள் நடந்துள்ளன. நான் அந்த இடத்தில் இருந்திருந்தால், அப்படியான சம்பவங்கள் நடந்திருக்காது. எனக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி வழங்கப்படுவதை ராஜபக்சவாதிகள் எதிர்த்தனர். நான் அப்படியான பதவியை ஏற்றால், சரியாக கடமையை செய்வேன் என்ற ராஜபக்சவாதிகள் புரிந்து வைத்துள்ளனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நான் நியமிக்கப்பட்டால் சட்டம் சரியாக அமுல்படுத்தப்படும் அப்போது ராஜபக்ச குழுவுக்கு சவாலாக அமையும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஐக்கிய தேசியக்கட்சியில் எவரும் எதிர்க்கவில்லை.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் என்னை வாழ்த்தினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான தரப்பே பயந்து அச்சத்தில் நடுக்கம் கொண்டனர்.
அந்த பதவி தற்போது ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றி அவருக்கும் முன்கூட்டியே தெரியாது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு கூறி திடீரென அமைச்சு பதவியை கொடுத்துள்ளனர்.இந்த தீர்மானம் குறித்து நாங்கள் கடும் அதிருப்தியும் அருவருப்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்காலத்தில் நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
|
ராஜபக்ச வாதிகள் என்னைக் கண்டு அஞ்சுகிறார்கள்!
Add Comments