மயிலிட்டியில் அரசியல் செய்யும் நல்லாட்சி!


valikaamam-north.jpg

படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள 6.5 சதுரக் கிலோமீற்றர் பரப்பைக்கொண்ட மயிலிட்டிக் கிராமத்தில் இதுவரை ஒருபகுதி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இறங்குதுறைக்கு செல்லும் போக்குவரத்து வசதிகள் செய்யப்படாதுள்ளது.
மயிலிட்டிப் பகுதியில் 15 படகுகளில் தொழில் இடம்பெறுகின்றபோதும் அங்கே பெறப்படும் மீனை சந்தைப்படுத்த முடியாத நிலமை கானப்படுகின்றது. இதனால் உள்ள படகுகளின் உரிமையாளர்களும் தொழிலிற்குச் செல்ல தயங்குகின்றனரென மயிலிட்டி மீனவ சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சொந்த வாகனங்களில் தடை ஏதுமின்றி பருத்தித்துறை பொன்னாலை வீதியால் பொதுமக்களை பயணிக்க அனுமதிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வை காணமுடியுமெனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான பிரச்சாரங்களிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி பொன்னாலை –பருத்தித்துறை வீதியை திறந்துவிடுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று வரை இலங்கை போக்குவரத்துசபை பேரூந்துக்கள் மட்டும் வெறுமனே நாள் ஒன்றிற்கு மூன்று தடவையென சேவையிலீடுபடுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
வெறும் பயணிகள் போக்குவரத்திற்கென நடைபெறும் இச்சேவை மீளக்குடியமர்ந்துள்ள மக்களிற்கு எந்தவித பயனுமற்றதென தெரிவிக்கும் மீனவ சங்கம் வெறும் ஏமாற்று ஊடகப்பிரச்சாரமெனவும் தெரிவித்துள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila