காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் ஊடாக கடந்தகால குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட முடியாது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். பலவந்தமாக காணாமல் போதல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பில் விளக்கமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
|
பலவந்தமாக காணாமல் போதல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக இலங்கையர்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் தண்டனை விதிக்கும் நடைமுறைகள் கிடையாது. மேலும், இந்த சட்டம் கடந்த கால குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்கும் வகையிலானதல்ல. குற்றச் செயலில் ஈடுபட்டு நாட்டில் எங்கேனும் மறைந்திருந்தால் அவரை தண்டிக்கும் வகையில் இந்த சட்டத்தின் 8ம் சரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டதாக கருதப்பட முடியாது. சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக இடம்பெற்ற விடயங்களுக்கு இந்த சட்டத்தின் ஊடாக தண்டனை விதிக்கப்பட முடியாது என திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
|
காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கும் சட்டத்தின் மூலம் கடந்த கால குற்றங்களுக்கு தண்டனை விதிக்க முடியாது! - திலக் மாரப்பன
Add Comments