அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மொனராகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர், சுதந்திரக் கட்சியில் ஜனாதிபதியைத் தவிர வேறுவொரு வேட்பாளர் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். |