அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை! - அமெரிக்கா அதிரடி


அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.அமெரிக்காவின் மத்திய விசாரணை பிரிவு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.ஜாலிய விக்ரமசூரியவுக்கான இராஜதந்திர பாதுகாப்பு இலங்கையின் வெளியுறவு அமைச்சினால் விலக்கிக்கொள்ளப்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.அமெரிக்காவின் மத்திய விசாரணை பிரிவு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.ஜாலிய விக்ரமசூரியவுக்கான இராஜதந்திர பாதுகாப்பு இலங்கையின் வெளியுறவு அமைச்சினால் விலக்கிக்கொள்ளப்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது.   
இதேவேளை தமது இராஜதந்திர பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படக்கூடாது என்று கோரி ஜாலிய விக்ரமசூரிய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். அமெரிக்காவுக்கான தூதுவராக இருந்தபோது ஜாலிய விக்ரமசூரிய 33ஆயிரம் அமெரிக்க டொலரை முறையற்ற வகையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய உறவினர் ஆவார். , ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila