பணியாளர்களை நீக்கிய வங்கிக்கு எதிராக வடக்கில் முனைப்படையும் போராட்டம்! - கணக்குகளை மூடும் வாடிக்கையாளர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தியமைக்காக ஹற்றன் நசனல் வங்கியின் கிளிநொச்சி கிளை உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் இடைநிறுத்தப்பட்ட செய்தி வெளியானதை அடுத்து, குறித்த வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பெரும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சமூக ஆர்வலர்கள் அந்த வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இடுகைகளை இட ஆரம்பித்துள்ளனர். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை கிளிநொச்சியில் உள்ள குறித்த வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த 18 ஆம் திகதி நடத்தியிருந்தனர். அது தொடர்பான நிழல் படங்களை பார்வையிட்ட கொழும்பில் உள்ள குறித்த வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள், இருவரையும் பணி நீக்கம் செய்திருந்தனர். அதையடுத்தே சமூக வலைத்தளங்களில் இவ்வாறான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், வங்கியின் நடவடிக்கையைக் கண்டித்து குறித்த வங்கியில் உள்ள கணக்கை பலரும் மூடி வருகின்றனர். இதுதொடர்பான படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila