இங்கிருந்து அள்ளிச் செல்பவர்கள் கிள்ளித் தெளிக்கவும் மாட்டார்களாம்


வட புலத்தின் பொருளாதார நிலைமை குறித் துப் பல தடவைகள் இவ்விடத்தில் பிரஸ்தாபித்து விட்டோம்.  கண்ட பலன் எதுவுமில்லை.

இப்போது எங்கள் வர்த்தகர்கள் நட்டமடை ந்து மனமுடைந்து செய்தொழிலை விட்டு வெளியேறுவதே ஒரே வழி என்ற நிலைமை க்கு வந்து விட்டனர்.

மாறாக தென்பகுதியில் இருந்து இங்கு வந்து ஆக்கிரமித்துள்ள வர்த்தக நிறுவனங்க ளும் தெருவோர வியாபாரிகளும் நிதி அமைப்பு களும் வடக்கின் உழைப்பு முழுவதையும் அள் ளிச் செல்கின்றனர்.

இவற்றையயல்லாம் பார்த்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய எங்களிடம் யாரும் இல்லை என்ற நிலைமையே உள்ளது.

இதற்கு மேலாக இலங்கை முழுவதிலும் ஒப்பிடும்போது, வட மாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலேயே வருமானம் அதிகம் என்ற புள்ளிவிபரப் பதிவுகளைத் தமக் காக்கிக் கொண்ட நிறுவனங்கள் பல இருக் கின்றபோதிலும் அவை ஒரு சிறுவீதத்தை யேனும் வட பகுதி மக்களுக்காகச் செலவிட வில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.

குறிப்பாக டயலொக் நிறுவனம், ஸ்ரீ லங்கா ரெலிக்கொம் போன்ற தொலைத்தொடர்பு நிறு வனங்கள் வட புலத்தாரின் பொருளாதாரத் தில் பெரும்பகுதியை அள்ளிச் செல்கின்றனர்.

ஆனால் இந்த நிறுவனங்கள் சமூக சேவை என்ற அடிப்படையிலேயோ அல்லது தமது நிறு வன பிரசாரத்தின் அடிப்படையிலேயோ தமிழ் மக்கள் நன்மையடையக் கூடிய எந்தச் சேவை யையும் செய்யவில்லை என்பது பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை மேலே பெயர் குறிப்பிட்டு கூறப்பட்ட நிறுவனங்களுடன் மட்டும் மட்டுப்படுத் திக் கொள்ள முடியாது.

மாறாக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், வங்கிகள், கடன் வழங்கும் கம்பனிகள் எனப் பலவற்றையும் குறிப்பிட முடியும்.

இத்தகைய நிறுவனங்களின் ஒட்டுமொத்த நோக்கமும் வடபுலத்து வருமானத்தை தென் பகுதிக்கு அள்ளிச் செல்வதுதான்.

எனினும் இது பற்றிய தெளிந்த சிந்தனை எதுவும் எங்களிடம் இல்லை. மேலும் தென் பகுதியில் இயங்குகின்ற இதே நிறுவனங்கள் அங்கு வீதிப் போக்குவரத்தை விதிமுறையுடன் சாரதிகளும் பாதசாரிகளும் அனுசரிப்பதற்கு உதவி செய்கின்றன.

வீதிகளின் ஒவ்வொரு வளைவுகளிலும் சந்திகளிலும் வாகனங்களின் வேகங்களைக் கட்டுப்படுத்துமாறு சிறுபிள்ளைகள் கூறுவது போன்ற விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, அங்குள்ள விளையாட்டுக் கழகங்களுக்கான உதவிகள், விளையாட்டு மைதானத் திருத்தங்கள், பல்கலைக்கழகங் களுக்கான வேலைத்திட்டங்கள் என ஏகப்பட்ட சமூகப்பணிகளை குறித்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. ஆனால் இங்கு எதுவும் இல்லை எனலாம். 

எனவே இத்தகைய நிறுவனங்கள் வீதி விபத்தைத் தடுப்பதற்காவது ஏதேனும் செய்யலா மல்லவா?
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila