இயற்கையும் இருள சோகமயமான முள்ளிவாய்க்கால் மண்ணில் விண் அதிர கதறி அழுத உறவுகள்!

தமிழினத்தின் வலிகளை சுமந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஆறாத வடுக்களுடன், மாறாத துயரை தந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது தமது உறவுகளை நினைவுகூர்ந்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது தமது ஆற்றாமையை தீர்த்துக் கொண்டனர்.




Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila