கோண்டாவில் ஆலயம் ஒன்றில் வடிவமைக்கப்பட்ட ஈழ வரைபடம் - கோப்பாய் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது


கோண்டாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் மகோ ற்சவத்துக்காக வீதியில் வடிவ மைக்கப்பட்டிருந்தது வளைவில் பொறிக்கப்பட்டிருந்த ஈழ வரைபடம் கோப்பாய் பொலிஸாரினால் உடனடியாக அகற் றப்பட்டுள்ளது.

கோண்டாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் மகோற்சவத்தை முன்னிட்டு கோவில் வீதிகளில் அலங்காரங்கள் மேற்கொள்ள ப்பட்டிருந்தன.

அதில் வீதி வளைவு நேற்று முன்தினம் வடிவமைக்கப்பட்டு வீதியில் பொருத்தப்பட்டிருந்தது. 

இதை அவதானித்த புலனாய்வுத்துறை யினர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை அவ்விட த்துக்கு சென்ற பொலிஸார் ஆலய நிர்வாக த்தினரிடம் விசாரணைகளை மேற்கொண் டதுடன், ஈழ வரைபடத்தை உடனடியாக அந்த வளைவில் இருந்து அகற்றுமாறு தெரி வித்தனர்.

உடனடியாகவே ஈழ வரைபடம் மறைக்கப்பட்டு நிறம் பூசப்பட்ட பின்னர் அவ்விடத்தை விட்டு பொலிஸார் அகன்றிருந்தனர்.  
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila