வவுனியாவில் முள்ளிவாய்க் கால் தினத்தினை நினைவு கூரு பவர்களை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந் தல் வாரத்தில் தமிழினப் படுகொ லையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமே ந்திய ஊர்தி பவனி நேற்று மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.
தீபமேந்திய ஊர்தியினை மோட் டார் சைக்கிளில் பின்தொடர்ந்து புலனாய்வாளர்கள் சென்றதுடன் ஊர்தியில் அஞ்சலி செலுத்தியவர்க ளையும் புகைப்படம் எடுத்தனர்.
இதனால் சற்று பதற்றத்துடன் மக்கள் அஞ்சலி செலுத்தினர். எனினும் பொதுமக்கள் பலரும் புலனாய்வா ளர்களுக்கு அச்சத்தில் அஞ்சலி செலுத்துவ தற்கு தயங்கி நின்றனர்.
யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்து நல்லாட்சி நிலவுகின்ற பொழுதிலும் நல்லாட்சி அரசிலும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமேயுள்ளமை குறிப்பிடத்தக்கது.


