வடக்கில் இராணுவப் பின்னணியுடன் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ள லீசிங் நிறுவனங்கள்!



வவுனியாவில் லீசிங் நிறுவன ஊழியர்களால்  தாக்கப்பட்டு ஒருவர்  படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும், தவறினால் உங்களை 4ஆம் மாடிக்கு கொண்டு சென்று விசாரிப்போம் என்றும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் லீசிங் நிறுவன ஊழியர்களால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும், தவறினால் உங்களை 4ஆம் மாடிக்கு கொண்டு சென்று விசாரிப்போம் என்றும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள், வவுனியா மில் வீதியிலுள்ள லீசிங் நிறுவன ஊழியர்கள் இருவர் அத்துமீறி உள் நுழைந்து வீட்டு உரிமையாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர் மீது தாக்குதல் நடாத்தினர். இதனால் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு லீசிங் நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு மாதாந்த கட்டுப்பணம் கடந்த மூன்று மாதங்களாக கட்டப்படவில்லை இதையடுத்து குறித்த மோட்டார் சைக்கிளை கையகப்படுத்துவதற்கு அவ்வீட்டிற்கு லீசிங் நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் சென்றுள்ளனர்.
இதையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளர் பணம் கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணங்களைத் தெரிவித்து கிளை முகாமையாளருக்கு அறிவித்துள்ளேன். சில தினங்களில் பணத்தை ஏற்பாடு செய்து கட்டிவிடுவதாகவும் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் இழப்பீட்டுப்பணம் வரவில்லை. அது வந்ததும் அனைத்துப் பணத்தையும் திரட்டிக் கட்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வாகனத்தை கையகப்படுத்த வந்த இரு ஊழியர்கள் தாகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து தரக்குறைவாக அவ்வீட்டின் குடும்பத்தலைவியிடம் நடந்து கொண்டபோது இருபகுதியிருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் கடந்த 30ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பொலிசார் தாக்கிய லீசிங் நிறுவன ஊழியர்ளைக் கைது செய்யவில்லை. இவ்வாறு வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த லீசிங் நிறுவன ஊழியர்கள் மீது பொலிசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வீடுகளுக்குள் சென்று அடாவடியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் வவுனியாவிலுள்ள லீசிங் நிறுவனத்தின் முகாமையாளரிடம் பக்கச்சார்பின்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் கோரியுள்ளார்.
இதேவேளை நேற்றுக் காலை 10 மணியளவில் 0772577218 என்ற தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு மேற்கொண்ட ஒருவர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும், தவறினால் உங்களை 4ஆம் மாடிக்கு கொண்டு சென்று விசாரிப்போம் என்றும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர் இராணுவ புலனாய்வாளர் என்று தன்னை அடையாளப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தால் லீசிங் நிறுவனத்தின் பின்னணியில் இராணுவம் இயங்குகிறதா என்ற கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது .
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila