
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அதற்கான அரச வர்த்தமானி இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எனினும், உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளாது பொது தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.