பேரம்பேசும் நடவடிக்கைகளை மகிந்த தரப்பினர் ஆரம்பித்துள்ளனர் – மங்கள

எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகளை மகிந்த தரப்பினர் ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்

தனது டுவிட்டரில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு போலி பிரதமருக்கு ஜனாதிபதி எதிர்வரும் திங்கட்கிழமை வரை காலக்கெடு வழங்கியுள்ளதாக மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இலஞ்சவிளையாட்டு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இலஞ்சம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுவினரிற்கு யோசித ராஜபக்ச தலைமை தாங்குவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 3 மில்லியன் டொலர்கள் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila