அவ்வாறான பார்வை சைவத் தமிழ் மக்களிடம் இருந்திருந்தால் தந்தை செல்வநாயகம் தமிழர்களுக்கான தலைவராக இருந்திருக்க முடியாது.
அதேவேளை தந்தை செல்வநாயகம் அவர்களும் தன்னை ஒரு கிறிஸ்தவ சமயத்தவராக ஒருபோதும் காட்டிக் கொள்ளவில்லை.
தன் மரணத்தின் பின் தன் உடலைத் தகனம் செய்ய வேண்டுமென உயில் எழுதியவர் தந்தை செல்வநாயகம் எனும்போது அவர் தமிழனாக மட்டுமல்ல, தமிழ் மொழி உயிரென்றால் சைவம் உடல் என்பதை அங்கீகரித்தவர்.
அவ்வாறான தூய சிந்தனையைக் கொண்ட தந்தை செல்வநாயகத்தை ஏற்றிப் போற்றியவர்களில் சைவ சமயத்தவர்களே முதன்மையானவர்கள்.
அதனால்தான் தந்தை செல்வநாயகத்தின் பூதவுடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க என்ற திருவாசகம் இசைக்கப்பட்டது.
இந்த உண்மையை இன்றிருக்கக்கூடியவர்கள் உணர்ந்து கொள்வது அவசியமானது.
தவிர, நேற்று முன்தினம் வலம்புரி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அன்பர் ஒருவர் இப்போது வட மாகாணம் முழுவதும் மதம் சார்ந்த நியமனங்கள் இடம் பெறுகின்றன.
இதுபற்றியயல்லாம் நீங்கள் கவனிக்கா மல் இருப்பது ஏன்? எனக் கடுப்பாகக் கேட்டார்.
இந்த நியமனங்களுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்கக்கூடாது என்பதற்காக, அவர்கள் உங்களுக்கு கையூட்டுத் தருகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.பதவியைப் பொறுப்பேற்றவர் என்ன சமயம் என்று பார்க்காதீர்கள் என்று கூறினோம். நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் பார்க்கிறார்கள். குறித்த ஒரு சமயம் சார்ந்த வர்களையே வடமாகாணத்தின் பொறுப்பான பதவிகளுக்கு நியமித்துள்ளனர் என்று கூறிய அவர், ஒரு பெரும் பட்டியலை வாசித்துக் காட்டினார்.
அதுமட்டுமல்ல, இன்னும் சில நியமனங் கள், குறித்த சமயத்தவர்களுக்கே வழங்கப்படவுள்ளன என்று குறிப்பிட்ட அவர், இன்னும் பத்து ஆண்டுகளில் சைவ சமயம் இந்த மண் ணில் இருக்காது எனக் கூறியபடி தொலைபேசி தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.
ஏன்தான் இப்படி என்று நினைத்தபோது தான் தந்தை செல்வநாயகம் அவர்களின் வாழ்வும் அரசியல் சார்ந்த தூய பணியும் நினைவுக்குரியதாயிற்று.
யார் எதைக் கூறினாலும் உயர் பதவிகளுக் கான நியமனங்களின்போது எவரும் மதச் சார்பை பின்பற்றாதீர்கள் என்பதுடன் யார் பதவிக்கு வந்தாலும் அவர் எந்தச் சமயம் என்று பார்ப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இதுவே தமிழ் வாழ உதவும்.