![]()
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசு கூற வேண்டும் என்று வலியுறுத்தியும்- யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10.30 மணிக்கு கறுப்பு பட்டியணிந்து கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. பேஸ்புக் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஒன்றுகூடியவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
|
தமது வாய்களை கறுப்பு துணிகளால் கட்டியவாறு, கைகளில் எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறும், தீபங்களை கொழுத்தியும் இவர்கள் இவ் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, நீதியை வழங்கு, விசாரணைகளை முன்னெடுக்காமல் ஓஎம்பி என் செய்கின்றது?, கடத்தல்காரர்களை தண்டிக்க தயங்கும் அரசே! குற்றவாளிகளை காப்பாற்றவா உனக்கு மக்கள் ஆணை வழங்கினார்கள்?
"இலங்கையின் இறையாண்மையும் எனது மகனும் ஒன்றா, மக்களின் பிரதிநிகளே எமது மக்களின் கண்ணீர் உங்களுக்கு வெறும் தண்ணீரா, ஜயா ஜனாதிபதியே, சந்தேகப்படும் இடங்களை பார்க்க அனுமதிப்பேன் என கூறியது வெறும் நாடகமா ?, ஆள் விழுங்கி அரசே காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி சொல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நீதி என்ன?
திருப்பி தரமுன் இருப்பதையாவது தெரிவி இலங்கையரசே, ஏமாற்றாதே எமாற்றாதே காணாமல் போனவர்களின் உறவுகளை ஏமாற்றாதே, இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்த்து" போன்ற எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.
![]() ![]() ![]() |
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி திடீர் போராட்டம்! பேஸ்புக் மூலம் ஒருங்கிணைப்பு.
Related Post:
Add Comments