நாடாளுமன்ற வரலாற்றில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் அர்ச்சுனா எம்பி கதைத்தது போல் இன்று வரை தமிழ் எம்.பி உட்பட எவரும் நாடாளுமன்றில் பேசவே இல்லை.இவ்வாறே நாடாளுமன்றில் கதைக்கவேண்டும். இதை விடுத்து தகாத வாரத்தைப் பிரயோகங்களை பேசக்கூடாது.
அதேபோன்று கடற்றொழில் அமைச்சருக்கு கடற்றொழில் தொடர்பில் சற்று அறிவு வேண்டும்.உள்ளூர் இழுவை மடி கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் கோடிக்கணக்கான பணத்தை இலஞ்சமாக கொடுத்தே அந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே எமக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் என்வென்றால் கடற்றொழில் அமைச்சரும் அந்த இலஞ்சத்தில் ஈடுபட்டுள்ளாரோ என ஐயம் தோன்றியுள்ளது.
மாற்றத்தை கொண்டுவருதாக சொன்னீர்கள் என்ன மாற்றத்தை கொண்டு வந்தீர்கள். கிளீன் சிறிலங்கா.முதலில் கடலை கிளீன் செய்யுங்கள். கடல்வளத்தை பாதுகாத்தால்தான் மீன் வளம் பெருகும்.
இவ்வாறு கடுமையாக தெரிவித்தார் வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம்.
அவர் கடற்றொழில் அமைச்சர் மீது சுமத்திய பல்வேறு குற்றச்சாட்டுகள், வடக்கில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அவலம்,நாளாந்த நெருக்கடி தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தவற்றை காணொளில் காணலாம்