நீதவானுக்கே மறுக்கப்பட்ட நீதி : கடும் அதிருப்தியில் தமிழ் மக்கள்

 அரசியல் தலையீடுகள், அச்சுறுத்தல்களுக்கு அடி பணியாமல் தனது நீதிச்சேவையில் நேர்மைத்தன்மையுடன் செயற்பட்ட நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் ஓய்வு பெற்றமை அவரை மட்டுமல்ல தமிழ் மக்களையே கவலைக்கு ஆளாக்கியுள்ளது.

நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்த அவர் இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியாவார்..

 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதி

இன்றைய வடக்கு - கிழக்கு மாகாண அனைத்து நீதிபதிகளிலும் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல்  தமிழ் நீதிபதி என்ற பெருமைக்கும் காரணமானவர்.

நீதவானுக்கே மறுக்கப்பட்ட நீதி : கடும் அதிருப்தியில் தமிழ் மக்கள் | Judge Ilanchezhiyans Judicial Career Ends

தனக்கான பதவி உயர்வு வழங்கப்படாமைக்கான காரணத்தைக்கூட அவர் கடந்த (01.02) ஆம் திகதி வவுனியாவில் நடத்தப்பட்ட தனக்கான கௌரவிப்பு நிகழ்வில் கூட விலாவாரியாக எடுத்துரைத்திருந்தார்.

காலதாமதம் என்னை ஓய்வு எடுக்க அனுப்பியது

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை. 13 ஆம் திகதி திங்கள் போயா. 14 ஆம் திகதி செவ்வாய் பொங்கல். திங்கள் இரவு ஜனாதிபதி சீனா பயணம். வெள்ளிக்கிழமை இரவு சீனாவில் இருந்து திரும்பி வந்தார். 18,19 விடுமுறை நாள். 19.01.2025 அன்று எனது இறுதி நாள். காலதாமதத்திற்கு நான் காரணமல்ல. காலதாமதம் என்னை ஓய்வு எடுக்க அனுப்பியது. காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்று நான் பல இடங்களில் பேசினேன். அந்த நீதி என் மீதும் தொடுக்கப்பட்டுள்ளது. எதையும் ஏற்றும் கொள்ளும் மனபாவம் வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.   

நீதவானுக்கே மறுக்கப்பட்ட நீதி : கடும் அதிருப்தியில் தமிழ் மக்கள் | Judge Ilanchezhiyans Judicial Career Ends

இவ்வாறு நேர்மைத்தன்மையுடன் செயற்பட்ட நீதவான் இளஞ்செழியனுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமையை இட்டு தமிழ் மக்கள் தமது அதிருப்தியையும் ஆழ்ந்த கவலையையும் வெளிப்டுத்தியுள்ளனர்.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila