ஒன்றா இரண்டா கணப்பொழுதுகளில் மணல்வீடுகள் மண்ணில் கரைவது போவதுபோல எங்கிருந்தோ துரோகமாய் எதிர்பார்;க்காத பொழுதில் எழுந்த ஆழிப்பேரலை எம் ஆயிரக்கணக்காக உயிர்களை வாரிசுருட்டி வதை செய்தது.
அழகெனவும் எம் அற்புத உறவெனவும் செல்வம் அள்ளித்தரும் அன்னையெனவும் அதுவரை எம் உறவுகள் நம்பியிருந்த கடல் செய்த மாபெரும் கொடுரத்தால் சின்னாபின்னப்பட்டு போனது எம் கடலோர மக்களின் அழகிய வாழ்வு.
கடந்த பத்தாண்டுகளின் முன் இதே நாளில் இப்படியொரு காலையில் கடலோரம் ஓலங்களின் இடமாக அவலங்களின் அடையாளமாக அநாதைகளை உருவாக்கிய அதிர்ச்சி நிலமாக எழிலிழந்து கிடந்தது.
பத்தாண்டுகள் கடந்துபோயினும் அந்த நினைவுகளில் இருக்கும் ஈரம் காயவில்லை. அழுகை ஓயவில்லை. நிர்க்கதியின் ஏக்கம் தீரவில்லை.
ஆழிப்பேரலை காவிச்சென்ற எம் கண்மணிகளை நினைத்து இன்று மக்கள் திரண்டு மலர் தூவி நினைவிடங்களுக்கு மாலையிட்டு தங்கள் கண்ணீர் காணிக்கைகளை செலுத்தினர்.
இன்று வடமராட்சி கிழக்கு ஆழிப்பேரலை நினைவாலயத்தில் கிராம அலுவலர் தவராசா தலைமையில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் பொது நினைவுத்தூபிக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.
அத்துடன் வடமராட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைப்பாளர் சூரியகாந் பொதுஅமைப்புக்களை சேர்ந்தவர்கள் பெருமளவானோர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.

- கொட்டும் மழையிலும் சுனாமியின் பத்தாண்டு நிகழ்வில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி- கவனிப்பாரற்று கிடக்கும் நாவலடி மக்கள்
- அகவை பத்தாகியும் இல்லிடம் கிடைக்காத அவலம்!- அகவை பத்தில் ஆழிப்பேரலை!
- சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி!