ஒரு நாட்டிலிருந்து ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்க் அடங்கிய பூட்டுடன் கூடிய பொதி இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த அத்துல ரோஹண வீரரட்ண என்பவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துல என்பவர் அந்த பொதியை பாதுகாப்பாக வைத்திருக்கும் படியும் அது மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியதென்றும் கூறி தனது மூத்த சகோதரனான சந்திரதாஸ என்பவரின் மகனிடம் கையளித்துள்ளார்.இந்நிலையில் மைத்ரிபால சிறிசேனவின் மகனின் காதலியின் சகோதரனின் நண்பனான லசித்த என்பவர் குறித்த விலாசத்திற்கு சென்று பணப் பொதியை பெற்றுக் கொண்டுள்ளார். அதன்போது சந்திரதாஸ முதலாளியின் மகள் எவ்வளவு கேட்டும் வந்த நபர் பதில் கூற மறுத்துவிட்டார். இதன்போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் பணப் பொதியுடன் சென்ற லசித்த கைதுசெய்யப்பட்டார். பொதி பூட்டப்பட்டிருந்ததனால் பொலிஸார் இது குறித்து விசாரணையினை சி.ஐ.டியினரிடம் ஒப்படைத்தனர். சி.ஐ.டி யினர் பெட்டிக்குள்ளிருந்து ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்கினை கைப்பற்றியுள்ளதுடன் விசாரணைகளை முழுமையாக முன்னெடுத்து வருகின்றனர். இதேநேரம், சந்திரதாஸ முதலாளியின் மகள் கல்கிஸ்ஸை மஜிஸ்ரேட்டை நேரில் சந்தித்து தனக்கு பணம் வந்த முறைமையினை விளக்கமாக கூறியுள்ளார். நீதிமன்ற விசாரணைகளின் பின் மேலதிக அனைத்து தகவல்களும் அம்பலத்திற்கு வரும். என்றும் அவர் தெரிவித்துள்ளார். |
ஒரு மில்லியன் சுவிஸ் பிராங் சிக்கிய விவகாரம்! – மைத்திரியை மாட்டிவிட அரசாங்கம் முயற்சி
Add Comments