கொழும்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சில கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். பொலிசார் அவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தடியடிப் பிரயோகம் செய்ததில் 28 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.