எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக குறித்த தொகையை விட மேலதிகமாக 5 இலட்சம் வாக்காளர் அட்டைகள் அச்சிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணி இன்றுடன் நிறைவு பெறவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்த வாக்காளர் அட்டைகளில் இதுவரை 95 வீதமானவை அச்சிடப்பட்டிருப்பதாகவும்இ கொழும்பு மாவட்ட அட்டைகளே இன்று அச்சிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய ஒரு கோடியே 65 இலட்சம் வாக்காளர் அட்டைகள் அச்சடிக்கப்படும் நிலையில் இதைவிட மேலதிகமாக 05 இலட்சம் அட்டைகள் அச்சடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


