இலங்கையில் கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக சுமார் ஏழு லட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டகளப்பில் கூடுதல் பாதிப்புகள்
மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்க அதிபர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.வடக்கே மன்னார் மாவட்டமும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், இதன் காரணமாக அங்கு போக்குவரத்து சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளனர்.
எனினும் இதுபோதுமானதாக இல்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
அடை மழை காரணமாகவும், அனுராதபுரத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தோடும் மழை நீர் அங்கிருந்து அருவியாற்றின் ஊடாக மன்னார் மாவட்டத்தை வந்தடைவதனாலும், மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பு வெள்ளக்காடாக மாறியிருக்கின்றது.


