இருவரிடமும் இரு வேறுபட்ட சூழல், கருணா பிரபாகரனிடம் பிரிந்ததால் தமிழ் இனம் அழிந்தது, அழிந்து வருகிறது மைத்திரி மகிந்தவிடம் பிரிந்ததால் நாட்டில் நல்லாட்சிக்கு வாய்ப்பு அதிகம்.
மைத்திரியிடம் பிரதமர் பதவியை ஏற்கும் படி மகிந்த மன்றாடியது கருணாவிற்குத் தெரியுமா….
மைத்திரி பதவிக்காக ஓடியது சரியானாலும் கருணா பிரிந்தது எதற்காக கிழக்கு மக்கள் என்றால் இன்று வரையும் இவரும் இவரது குடும்பமும் பதவிக்காகவே மகிந்தவிடம். புலிகளின் தலைமையுடன் பகைத்தது எதற்காக? பதவிக்காக இல்லையா?
பதவி என்றால் கருணாவின் மனைவி பிள்ளைகள் எங்கே வெளிநாட்டு வாழ்க்கை கருணாவை பாதுகாத்த எத்தனை குடும்பம் விதவைகள் மற்றும் சிறைகளில் இப்படியா மைத்திரி??
மக்கள் சிந்திக்கும் தருணம் கரணாவின் மைத்திரி தொடர்பான உரை ஒப்பிட முடியுமா…….
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தனக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்ற சுயநலம் காரணமாகவே அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
கல்வியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடி கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்வி அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் சனிக்கிழமை (06) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘பொதுவேட்பாளர்; மைத்திரிபால சிறிசேன சுயநலத்துக்காகவே கட்சி மாறினார். அவருக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்பதாலேயே கட்சி மாறினார். மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்துள்ள கூட்டணியினர் துவேசம் பிடித்தவர்கள். இவர்களிடமிருந்து சிறுபான்மை மக்களுக்கான எந்தத் தீர்வும் கிடையாது.
ஐனாதிபதிக்கு எதிராக நிற்பதற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட்டுச்சேர்ந்துள்ள இவர்களில், சிறுபான்மையினருக்கு எதிராகச் செயற்படும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.
இவர்கள் செய்துள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களை பார்த்தபோது எனக்கு சிரிப்பு வந்தது. கட்சி இல்லாதவர்கள் எல்லோரும் அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இவர்களின் ஒப்பந்தத்தினால் எதையும் செய்யமுடியாது. இந்த பொது அணியினர் மக்களை ஏமாற்றும் நாடகத்தையே அரங்கேற்றியுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் ஆட்சியிலேயே கல்வி பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. இதுவரை எந்த ஆட்சியாளரும் செய்திராத கல்வி அவிருத்தியை எமது ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷ செய்துள்ளார். பல்கலைக்கழக அபிவிருத்தி, ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித்திட்டம், நனசல மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடங்கள் போன்ற பல்வேறு கல்வி அபிவிருத்தித்திட்டங்களை அவர் மேற்கொண்டுள்ளார். அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடிப்பாலம், மண்முனைப்பாலம், ஓட்டமாவடிப்பாலம் உள்ளிட்ட பாலங்களையும் அவர் புனரமைத்துள்ளார்.
தனக்கு வாக்கு போட்டவர்கள், தனக்கு வாக்கு போடாதவர்கள் என்று பாராது சேவை செய்கின்ற எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
மேலும், கடந்த ஐனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தீர்கள். அதற்காக ஐனாதிபதி, அபிவிருத்திகளை மேற்கொள்ளாமல்; விடவில்லை என்பதை நினைவிற்;கொள்ளவேண்டும். சரத் பொன்சேகா ஐனாதிபதியாக வந்திருந்தால், அவரிடம் போய் பாலம் கட்டித்தாருங்கள். வீதியை போட்டுத்தாருங்கள் என்று கேட்கமுடியுமா? ஏனெனில், இராணுவத்திலிருந்து வந்த அவர் இராணுப் பாணியிலேயே பேசுவார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் சிந்தித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்’ என்றார்.