யாழ்.பல்கலைக்கழகம் சுயாதீனமாக இயங்கவில்லை

newsயாழ்.பல்கலைக்கழகம் சுயாதீனமாக இயங்கவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
 
பல்கலைக்கழகங்கள் அரசியல் தலையீடுகள் இல்லாமல் சுயாதீனமாக இயங்க வேண்டும். ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் இதனுடைய செல்வாக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
 
மாணவர்களுக்கு தகுதியான கல்வியினை வழங்க வேண்டுமாயின் திறமையானவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால் பின்கதவால் வந்தவர்களுக்கு தற்போது முன்னுரிமை வழங்கப்படுகிறது.
 
இந்த விடயம் தொடர்பில் மெளனமாக இருந்தால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினை ஏற்படும்.  இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து கல்விக்கான நிதி ஓதுக்கீட்டை 6 வீதமாக அதிகரிக்க வேண்டும் என பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டது. 
 
ஆனால் அதை விட குறைந்த தொகையினை அரசு ஒதுக்கிவிட்டு, அதிலிருந்து ஒருதொகை பணத்தை தலைமைத்துவப் பயிற்சி வழங்கி வரும் இராணுவத்திற்கு கொடுக்கின்றது.
 
இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த தலைமைத்துவப் பயிற்சியால் பலமாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என அவர் குற்றஞ்சாட்டினார். 
 
விரிவுரையாளர்களின் சம்பளப் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு அவர்கள் வெளியேறி வருகின்றனர். எனவே விரிவுரையாளர்களின் கோரிக்கையினை உயர் கல்வி அமைச்சு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், கடந்த முறை இடம்பெற்றத்தைப் போல தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
 
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம்
 
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இன்று முற்பகல் 11 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வாயிலில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவு, கல்விக்கான நிதி ஓதுக்கீடு அதிகரிப்பு,உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்சு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி  செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டது.
 
 
 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila