மகிந்தரின் அழுக்கான கைகளை தொட விரும்பவில்லை ; மைத்திரி
ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மகிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவுக்கு கைலாகு கொடுப்பதற்காக கையை நீட்டினார். எனினும் அதனை மறுத்த மைத்திரிபால கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கருத்து வெளியிட்ட மைத்திரிபால சிறிசேனா,
தமது சுத்தமான கைகள் ஊழல்களால் அழுக்கடைந்துள்ள மகிந்தவின் கைகளில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தாம் கைலாகு கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
தாம் எடுத்தது சிங்கத்தின் தைரியத்தை ஒத்த தீர்மானம். கைலாகு கொடுப்பதன் மூலம் அது தளர்ந்து போய் விடக்கூடாது என்பதும்தான் அதற்கான காரணம் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.
Add Comments