ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனது தேர்தல் பிரச்சாரம், மேடை அமைப்பு, போஸ்டர், கட்அவுட் போன்றவற்றை செய்யும் பணிகளில் சிறை கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே கண்டித்துள்ளது.
நீல நிற சட்டை மற்றும் அரைக்காற்சட்டை அணிந்து சிறை கைதிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கபே விடுத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 14ம் திகதி காலை மாத்தறை கம்புறுபிட்டியவில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேர்தல் பிரச்சார மேடை அமைப்பு பணியில் 44 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை புகைப்பட ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலி சிறையில் உள்ள கைதிகள் என தெரியவந்துள்ளது.
சிறைச்சாலை திணைக்களத்தின் சொத்துக்கள் பல தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சந்திரிசிறி கஜதீர உள்ளதுடன் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் இலங்கை கம்யூனிச கட்சியின் உறுப்பினராவார்.