வடக்கு மாகாண சபையின் பட்ஜெட்டில் ஆளுநர் சந்திரசிறிக்கும் நிதி ஒதுக்கீடு உறுப்பினர்கள் கடும் விசனம்


வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட் டத்தில் வடக்கு மாகாண ஆளுநருக்கும் நிதியொது க்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளமையினால் உறுப் பினர்கள் கடும் விசனமடைந்துள்ளனர்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களிற்கிடையிலான சந்திப்பொன்று சுன்னாகம்  பிரதேச சபையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போதே வடக்கு மாகாண சபையின் வரவு செலவு த்திட்டத்தில் வடமாகாண ஆளுநர்  ஜீ.ஏ.சந்திரசிறிக்கும் நிதியொதுக்கப்பட்டுள்ளமை தெரிய வந்து ள்ளது.

மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநருக்கு 60 இலட்சம் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 2014 ஆம் ஆண்டிற்கான மாகாணசபையின் வரவு செலவுத்திட்டத்திலும் ஆளுநருக்கென நிதியொதுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபையின் நிதியிலிருந்து ஆளுநருக்கு நிதியொதுக்கப்பட்டமை தொடர்பில் மாகாண சபையின் உறுப்பினர்கள் பெரும்பாலானோருக்கு தெரியப்படுத்தப்படவுமில்லை.

கிழக்கு மாகாண சபையில் இந்நடைமுறையில்லாத போதிலும் வடக்கு மாகாண சபை ஏன் ஆளுநருக்கு நிதியொதுக்குகின்றது என உறுப்பினர்கள் சிலர் கேள்வியயழு ப்பியுள்ளனர்.

இதற்கு நேற்று முன்தினம் நடை பெற்ற கூட்டத்தில் பதிலளித்த முதலமைச்சர், இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஆளுநருக்கு நிதியயா துக்கப்பட்டுவிட்டதாகவும் அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தில் அதனை நிறுத்த முடியாது எனவும் காலப் போக்கில் அவற்றினை படிப்படியாக குறைத்து நிறுத்த முடியும் என தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர்களிற்கு தலா 60 இலட்சம் ரூபாவும் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருக்கும் தலா 60 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆளுநருக்கு எவ்வாறு 60 இலட்சம் ஒதுக்கப்படமுடியும்.

அரச உத்தியோகத்தரான ஆளுநருக்கு மாகாண சபை நிதியயாதுக்க த்தேவையில்லையயன்றும் ஆளுநர் அரசியல்வாதியல்ல. ஆகையினால் இந்நிதியயாதுக்கீட்டினை மாகாணசபை அடுத்தாண்டு வரவு செலவுத்திட்டத்தில் நீக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நீக்கப்படாவிட்டால் 2015 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தினை எதிர்க்கப்போவதாக உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் நடை பெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததோடு 27 மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila