இச்சம்பவம் பற்றி நேரடியாக கணபதிப்பிள்ளை மோகன் அவர்கள் தெரிவித்ததாவது,
நேற்றிரவு அவரது செல்லம்ஸ் பில்டிங் அலுவலகத்துக்கு வருகை தந்திருந்த பிள்ளையானின் TMVP கட்சியின் குழுவினர் வலுக்கட்டாயமாக மோகன் அவர்களை அழைத்து தமது வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அச்சமயம் TMVP கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், மோகன் அவர்களின் உறவினர் ஒருவரிடம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
கடந்த மாகாண சபை தேர்தலின் போது மேடைக்கு மேடை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஆகவே மகிந்தவுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டார் என்ற குற்றத்தின் பேரில் அவரை உள்ளே தள்ள போகின்றோம் என்று கூறி சென்றுள்ளார்.
WP PF 0816 என்ற இலக்க வெள்ளை நிற டொல்பின் வானில் செங்கலடியில் ஏற்றப்பட்ட மோகன், அதன் பின்னர் இரு வாகனங்களில் மாற்றி ஏற்றப்பட்டு, வாழைச்சேனை TMVP அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதற்கிடையில் மோகன் அவர்களின் மனைவி பொலிசில் முறைப்பாடு செய்ததை அடுத்து மட்டக்களப்பு வீதிகள் யாவும் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்தமையால், மோகன் அவர்களை அங்கிருந்து பதுளை வீதி ஊடாக வவுணதீவு காட்டுப்பாதை வழியே மட்டக்களப்பு TMVP அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
மட்டக்களப்பு TMVP அலுவலகத்தில் வைத்து மகிந்தவிற்கு எதிராக செயற்பட்டால் பாரிய விளைவை சந்திக்க நேரிடும் என்று பிள்ளையான் மற்றும் அவரது குழுவினரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்ட பின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் OIC அவர்களின் நேரடி தலையீடு மற்றும் அழுத்தம் காரணமாக அதாவது மோகனின் மனைவி தெரிவித்த விபரங்களின் பிரகாரம் அவர் நேரடியாக பிள்ளையான் அவர்களுக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் காரணமாய் வேறு வழியின்றி மோகன் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மோகன் அவர்களின் கடத்தல் பற்றிய செய்தி உடனடியாக இணையத்தில் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமது பெயர் மற்றும் கட்சியின் பெயர் மேல் இழுக்கு ஏற்பட்டதை தவிர்ப்பதற்காக பிள்ளையான் மற்றும் அவரது குழுவினர் அவர்களது ஊடகச் செய்தியில் இதை ஒரு நட்பு ரீதியான கலந்துரையாடல் என்றும், மோகன் அவர்களை பிள்ளையான் தனது அலுவலகத்தில் சந்தித்ததாகவும் அவரே அதனை உறுதி செய்ததாகவும் இருட்டடிப்பு செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
மோகனின் மனைவி காவல் நிலையத்திலிருந்து மோகன் அவர்களுடன் தொலைபேசியில் பேசியதாக செய்தி வெளியிட்டுள்ள அவர்கள் மோகன் அவர்களை தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள விடாமல் வைத்திருந்ததாகவும் உள்வரும் அழைப்புக்களை தாமே பேசிக்கொண்டும் இருந்துள்ள நிலையில் ஏறாவூர் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் உயர் அழுத்தம் காரணமாகவே மோகன் விடுவிக்கப்பட்டதாகவும் திரு.கணபதிப்பிள்ளை மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மிகவும் கடுமையான முறையில் தாம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மோகன் அவர்கள் கடத்தப்பட்டதை அறிந்து செங்கலடி மக்கள் மற்றும் வர்த்தகர்கள் செங்கலடி செல்லம்ஸ் பில்டிங்கில் இன்று அதிகாலை ஒன்று கூடி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த பல மாதங்களுக்கு முன் TMVP கட்சியில் இருந்து விலகி இருந்த மோகன் அவர்களுக்கு செங்கலடியில் மக்களின் செல்வாக்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐ. தே. கட்சியின் ரணில் அவர்களின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்து ஐ.தே.கவுடன் இணைந்த பின் மட்டக்களப்பின் தமிழ் வேட்பாளராக அறிவிக்க இருந்த நிலையில் மோகன் மீது கொண்ட தனிப்பட்ட மற்றும் கட்சி காழ்ப்புணர்ச்சி காரணமாக பிள்ளையான் மற்றும் அவரது குழுவினர் அரங்கேற்றிய இந்த கடத்தல் சம்பவம் வெளி உலகிற்கு தெரிய வந்ததன் காரணமாக தற்போது இதனை வெறும் சந்திப்பு என்று பிள்ளையான் குழு வதந்தி கிளப்பி விட்டுள்ளது. ஆளும் கட்சியின் அதிகாரம் கொண்டு அராஜகம் நிகழ்த்தும் இவர்களின் கடத்தல் சம்பவங்கள் மட்டக்களப்பில் ஒன்றும் புதியதல்ல.
தொடர்புடைய செய்தி - ஆளும் கட்சியின் ஆதரவில் பிள்ளையானின் அராஜகம்!