இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாடியில் ஒரு கருப்பு நிறத்திலான கொடியொன்று வெளியில் பறக்க விடப்பட்டுள்ளது. அந்தக் கொடியில் இஸ்லாமிய எழுத்துக்கள் காணப்படுகின்ற’து.
இதன் காரணமாக விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திசை மாற்றப்பட்டு வருகின்றது என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு-
தற்போதைய தகவல்களின் பிரகாரம் 50 பொது மக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிட்னி போலிஸ் மா& அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சிட்னி கபே கட்டடத்தில் சிறை பிடிக்கப்பட்டிருந்தவர்களி்ல் 3 பேர் அங்கிருந்து தப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
அவர்கள் தப்பி வந்தனரா அல்லது விடுதலை செய்யப்பட்டனரா என்பது வெளிவரவில்லை. இருப்பினும் அவர்கள் தப்பி வந்திருக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இந்த செயலில் ஈடுபடும் நபர்களது நோக்கம் இன்னும் தெளிவில்லை என்றும், ஆனால் இது அரசியல் நோக்கமாக இருக்கலாம் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய தனி அரசு போராட்டத்திற்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவளித்து வருகிறது.
பொது மக்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தில் அமெரிக்க தொடர்பு அலுவலகமும் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டின் அலுவலகமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திய தகவல்
தற்போது தீவிரவாதி இருக்கும் அறைக்கும் மின்சாரம் தடபை்பட்டுள்ளதால் சற்று பதட்டமானசூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
மேல் மாடியில் ஒரு கருப்பு நிறத்திலான கொடியொன்று வெளியில் பறக்க விடப்பட்டுள்ளது. அந்தக் கொடியில் இஸ்லாமிய எழுத்துக்கள் காணப்படுகின்ற’து.
இரண்டாம் இணைப்பு-
தற்போதைய தகவல்களின் பிரகாரம் 50 பொது மக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிட்னி போலிஸ் மா& அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சிட்னி கபே கட்டடத்தில் சிறை பிடிக்கப்பட்டிருந்தவர்களி்ல் 3 பேர் அங்கிருந்து தப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
அதேவேளை, இந்த செயலில் ஈடுபடும் நபர்களது நோக்கம் இன்னும் தெளிவில்லை என்றும், ஆனால் இது அரசியல் நோக்கமாக இருக்கலாம் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய தனி அரசு போராட்டத்திற்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவளித்து வருகிறது.
பொது மக்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தில் அமெரிக்க தொடர்பு அலுவலகமும் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டின் அலுவலகமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திய தகவல்
தற்போது தீவிரவாதி இருக்கும் அறைக்கும் மின்சாரம் தடபை்பட்டுள்ளதால் சற்று பதட்டமானசூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
3ம் இணைப்பு
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை தெரிவிப்பு
அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் 20 பொது மக்களை ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் சிறைபிடித்து வைத்துள்ள சம்பவம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை, அவுஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்குமென அவரது டுவிட்டர் பக்கத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில், ஜனாதிபதி: சிட்ணி பிணைக்கைதி நிலைவரம் பற்றி ஆழ்ந்த கவலை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.