வந்துரம்ப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ராஜினாமா

காலி, வந்துரம்ப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரதேச அரசியல்வாதி ஒருவரினால் பிரயோகிக்கப்படும் அழுத்தம் காரணமாக இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வந்துரம்ப பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக ஜீ.எல்.கீர்த்திசிங்க கடமையாற்றி வந்தார்.
அண்மையில் வந்துரம்ப பிரதேசத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவிருந்த தேர்தல் மேடை தாக்கி உடைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமவின் பாதுகாவலர்கள் மூன்று பேரை வந்துரம்ப பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட பாதுகாவலர்களை பிரதி அமைச்சர் பலவந்தமாக பொலிஸ் நிலையத்திற்குள் பிரவேசித்து தனது சொந்த வாகனத்தில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சருக்கு எதிராகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அழுத்தங்களை தாங்கிக் கொள்ள முடியாது தாம் பதவியை ராஜினாமா செய்வதாக வந்துரம்ப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் பிரயோகிக்கும் அழுத்தங்கள் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila