மகிந்த சிந்தனைவயப்பட்ட காடைத்தனம் வன்னியில் கோலோச்சுகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - வன்னி:-
இலங்கை இராணுவப் பிரிவில் வலுகட்டாயமாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் மஹிந்தவிற்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் வாக்களிப்பதற்காக வள்ளிபுனம் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தபால் மூல வாக்குச்சாவடியிலேயே இன்று காலை முதல் மோசடிகள் நடந்தவருவதாக கூறப்படுகின்றது.
தமிழ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களித்தே தீர வேண்டுமென படை அதிகாரிகள் நிர்ப்பந்தித்து வருவதாகவும் இல்லையேல் அவர்கள் மீண்டும் பயங்கரவாத சந்தேக நபர்களாக கைது செய்யப்படுவரென மிரட்டப்பட்டுமுள்ளனர்.இதனால் முன்னாள் போராளிகளான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு தமது வாக்குச் சீட்டுக்களை பெட்டிகளில் போடுவதற்காக கொண்டு செல்லும்போது அங்குள்ள இராணுவத்தினர் அந்த வாக்குச்சீட்டுகளை கையில் வலுக்கட்டாயமாக பெற்றுக் கொள்வதாகவும் யாருக்கு வாக்களித்துள்ளனரென்பதை சரி பார்ப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.