போர்க்களமாக மாறியது சிறிகோத்தா:-
பொது எதிரணிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை அரசாங்க தரப்பு ஆதரவாளர்கள் கல்வீச்சிலும் ஈடுபட்டதை தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அப்பகுதி சற்றுமுன்னர் போர்க்களமாக மாறியுள்ளது.
எதிரணிபொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கியதேசிய கட்சி தலைவரும் இடையில் ஏற்பட்டுள்ள இரகசிய உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்ட அரச தரப்பினர், பின்னர் சிறிகோத்தா மீது கல்வீச்சினை மேற்கொண்டதை தொடர்ந்தே இந்த பதட்டமான நிலை உருவாகியுள்ளது.
சிறிகோத்தாவின் முன்னாள் உள்ள வீதிகள் போர்க்களமாக மாறியுள்ளதாகவும், கலகம் அடக்கும் படைப்பிரிவினர் அனுப்பபட்டுள்ளதாகவும், இந்த மோதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
விமல்வீரவன்சவின் குண்டர்களே இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஐ.தே.கவி்ன் தலைமையகம் சிறிகொத்தவில் பதற்றநிலை்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சிறிகொத்தவிற்கு வெளியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதன்போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு சிறிகொத்த கட்சி தலைமையகத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிசார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள சிறிகொத்தவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொதுவேட்பாளர் மைத்திரியின் ஆதவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சிறிகொத்த மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


