குறித்த சம்பவம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் தகவல் தருகையில்,
இன்றைய தினம் மாலை 6.30மணியளவில் மந்திகை- கொடிகாமம் வீதி ஊடாக மாகாணசபை உறுப்பினர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
இந்நிலையில் குறித்த சமயம், ஒரு மோட்டார் சைக்களில் இருவர் என்னை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். அதிகம் மக்கள் நடமாட்டமற்ற அந்த வீதியில் அவர்கள் வருவது தொடர்பாக நான் அதிகம் கவனத்தில் எடுக்கவில்லை.
ஆனால் அவர்கள் பின்தொடர்ந்து சற்று தூரத்தில் எனக்கு முன்னால் வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்து என தூஷண வார்த்தைகளால் திட்டினார்கள். பின்னர் நான் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நீங்கள் யார் என கேட்டேன்.
அப்போதும் அவர்கள் என்னை திட்டிக் கொண்டார்கள். அவர்கள் அண்மையில் ஜனாதிபதி கொடுத்த மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். பின்னர் அவர்கள் என்னிடம் கூறினார்கள். உன்னுடைய செயற்பாடுகளை அவதானிக்கிறோம்.
எமக்கு எதிராகச் செயற்படுவதை உடனடியாக நிறுத்து இது உனக்கு 2வது எச்சரிக்கை இதனையும் நீ மீறினால் குடும்பத்தோடு கொல்லப்படுவாய். என கூறியதுடன் நாங்கள் யார் வந்தாலும் ஆட்சியில் இருப்போம் எனவும் கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்.
பின்னர் நான் வேகமாக சென்று மக்கள் நடமாட்டமுள்ள பகுதிக்குள் நின்று தெரிந்தவர்களை அழைத்துக் கொண்டு பருத்துறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு கொடுத்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.