பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவத்தைக் கொண்ட- ரட்நாயக்க ஆராச்சிலாகே சிறிசேன என்பவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான மெதமுனவில் வசிக்கிறார். மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் இருந்து குறுகிய தூரத்திலேயே சிறிசேனவின் வீடும் அமைந்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவைப் போன்றே இவரும் கிராம சேவகராக இருந்துள்ளார். |
அத்துடன் சுவர்ணவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட நகைச்சுவை நாடகம் ஒன்றில் மைத்திரிபால சிறிசேனவாக இந்த சிறிசேன நடித்துள்ளார். ஜனாதிபதி வேட்புமனுத்தாக்கல் தினத்தன்று சிறிசேன தேர்தல் திணைக்களத்துக்கு வந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதேவேளை தாம் ஏன் இந்ததேர்தலில் போட்டியிடுகிறார் என்பதற்கான விளக்கத்தை மெதமுலானை சிறிசேன இன்னும் வெளியிடவில்லை. முன்னர் எப்போதும் அவர் அரசியலில் பங்கேற்கவும் இல்லை. எனினும் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குகளை ஒரளவு குறைக்கலாம் என்ற வகையில் இவர் போட்டியிட வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. |
மஹிந்தவின் வீட்டுக்கருகே வசிக்கும் மற்றொரு சிறிசேனவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!
Add Comments