நல்ல ஜனாதிபதி! நல்ல கல்வி அமைச்சர்!: யாழ்ப்பாணத் தம்பி

நல்ல ஜனாதிபதி! நல்ல கல்வி அமைச்சர்!: யாழ்ப்பாணத் தம்பி:-
சிங்கள தேசத்தில தங்கட உரிமையளுக்காக போராடுற மாணவர்கள தண்டிச்சு அவர்களின்ட வாழ்க்கையை நாசாக்கிற குள்ள நரி வேலையில ஈடுபடுற மகிந்தவின்ட உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தமிழ் மாணவர்களின்ட உரிமையளை மறுத்து அவையின்ட குரலயும் நசுக்கிறவர்..

கிட்டத்தட்ட மகிந்த சிந்தனைக்கு ஏற்ற உயர்கல்வி அமைச்சர்...
எங்களுக்கு ஒழுக்கம்தான் முக்கியம் எண்டு அநுராதபுரத்தில மகிந்தர் வாய் கிழிய கத்துறார்.. அதோட ஒழுக்கம் உள்ள பிரசைகளை வளர்த்து தன்ட அபிவிருத்தி மேம்பாடுகளில ஈடுபடுத்தவேணுமாம் எண்டும் உருகினார்...

மகிந்தவுக்கு ஒழுக்கத்தப்பற்றி பேச என்ன அருகதை இருக்குது? அதப்போல மாணவர்களின்ட ஒழுக்கத்தப் பற்றி வாய்கிழிய பேசி ஒழுக்காற்று நடவடிக்கை எண்டுற பேரில பல்கலைக்கழகங்களில அராஜகம் செய்யிறவர்தான் திஸ்ஸநாயக்க...
அவரின்ட ஒழுக்க சீத்துவம் ஊடகங்களில நல்லா நாறுது பாருங்கோ...

நல்ல ஜனாதிபதிக்கு நல்ல கவ்வி அமைச்சர்...

வாய் திறந்தாலே ஒழுக்க சீர்கேடுகளும் வன்மமும்தான்...
அமெரிக்க தலைவர்கள அடித்து தொங்க விடவேணும் எண்டார். கொல்லப்பட வேண்டிய ஆக்கள் எண்டுறார்.. ஜனநாயகமாக போராடுற மாணவர்கள வன்முறை கொண்டு ஒடுக்கிறவர் வேற எப்பிடி கதைப்பார்...

இப்ப அவையளின்ட முன்னாள் சனாதிபதி சந்திரக்காவை பிறந்த மேனியுடன் தெருவில் விரட்டியக்க வேணும் எண்டுறார்... இப்பிடி பேசுற ஒருத்தர்தான் மகிந்தவின்ட உயர்கல்வி அமைச்சர்...

இதக் கேக்கேக்குள்ள, மின்னம்பேரிய நிர்வாணமாய் தெருவில இழுத்துக் கொண்டு போனதும் இசைப்பிரியாவ நிர்வணமாக்கி யுத்தகளத்தில இழுத்துக் கொண்டுபோனும் உங்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் நினைவுவரும்...

மகிந்தவின்ட கல்வி அமைச்சர் எல்லோ?

இதுதான் மகிந்த சிந்தனை... வன்முறை, பாலியல் வல்லுறவு, கொலை, அழித்தல் இதுதான் மகிந்த சிந்தனை. விமர்சனங்களுக்கு விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கே இப்பிடி என்றால் இந்த நாட்டில பெண்களின்ட நிலையை எப்பிடி எண்டு சொல்லுறார் ரோசி சேனநாயக்க... மெய்தான்...

எல்லா நாடுகளிலும் நல்லா படிச்ச ஒழுக்கமான கல்வியின்ட முக்கியம் தெரிஞ்ச சமூக மதிப்புள்ள ஆள்ள உயர்கல்வி அமைச்சராய் போடுவினம்.. இது ஜெயில்ல இருந்து கொண்டு கல்வி அமைச்சர மகிந்த போட்டால் அவர் வேற எப்பிடி கதைப்பார்?

மகிந்த இலங்கைத்தீவ சீரழிக்கிறார் எண்டால் எஸ்.பி பல்கலைக்கழகங்கள சீரழிக்கிறார்.. மகிந்தவுக்கு அதுதானே தேவை...

இப்பிடி எல்லாம் நல்ல கொள்கையள வைச்சுக் கொண்டு அத நடைமுறைப்படுத்திக் கொண்டு அதையே பேசிக் கொண்டு நல்லா வெள்ளைக் கதை கதைப்பார் மகிந்தர்.

அப்பிடியே, எங்கட போராட்ட பயங்கரவாத போராட்டம் எண்டுவார்...
உப்பிடி எல்லாம் கதைக்கிறவையள் எங்கட போராட்டத்த எப்பிடித்தான் சொல்லுவினம்?

ஆனால் ஒண்டுமட்டும் தெளிவாய் தெரியுது...

நல்ல ஜனாதிபதி! அவருக்குப் பொறுத்தமான நல்ல கல்வி அமைச்சர்!!

யாழ்ப்பாணத் தம்பி
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila