அரசாங்கம் இனவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றது – சுரேஸ் பிரேமசந்திரன்

அரசாங்கம் இனவாத அரசியலில் ஈடுபட்டு வருகின்றது – சுரேஸ் பிரேமசந்திரன்:-

அரசாங்கம் இனவாத அரசியலில் ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கம் இவ்வாறு இனவாத அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உஒண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் எங்களுடன் இணைந்து நாட்டை விலை பேசி விற்று விட்டதாகவே அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது எனவும் இதில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வரையில் அரசாங்கத்துடனோ அல்லது எதிர்க்கட்சிகளுடனோ ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மருத்துவ காரணங்களுக்காக இந்தியா விஜயம் செய்துள்ளார்.

சம்பந்தன் நாடு திரும்பயவுடன் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அளவிற்கு இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila