காணி சுவீகரிப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்



news காணி சுவீகருப்புக்கு எதிரான மனுவொன்றை விசாரணை செய்ய ஏற்றுக் கொண்டது கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம்.
மிருசுவிலில் தனியாருக்கு சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாகக் கையகப்படுத்திய  இராணுவம் , அதில் 52 ஆவது படையணியின் தலைமையகத்தை  கட்டியது.
 இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காணியின் உரிமையாளர்கள்  கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில்,மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, 52 ஆவது பிரிவின்  கட்டளைத் தளபதி அனுர சுபசிங்க, காணி அமைச்சர், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.
 மேற்படி,சூவீகரிக்கப்பட்ட காணி மிருசுவிலை சொந்த இடமாக கொண்ட தாய்க்கும்,நான்கு மகள் மாருக்கும் சொந்தமாகும்.
 
அந்தக் காணிக்குள்  அடாத்தாகப் புகுந்த இராணுவம்ர் அங்கிருந்த தென்னம் தோட்டத்தை அழித்துவிட்டு அந்த இடத்தில் இராணுவ தலைமையகத்தை அமைத்திருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
 
தற்போது அந்தக் காணியைச் சுவீகரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் அரசுத் தரப்பால் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து காணி உரிமையாளர்கள் அதனை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
 
பொதுத் தேவைக்காகத் தனியார் காணிகளை அரசு சுவீகரிக்க முடியும் என்ற சட்ட ஏற்பாட்டை மேற்கோள் காட்டியே இந்தச் சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
 
இந்த மனு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றைய தினம் மேன்முறையீட்டு தலைமை நீதியரசர் விஜித மலகொட, நீதியரசர் டிலிப் நவாஸ் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
மனுதாரர் தரப்பில் சட்டத்தரணிகள் கே.சயந்தன், லூயி கணேசநாதன் ஆகியோரின் அனுசரணையுடன் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதாடினார்.
 
'பொதுத் தேவைகளுக்கு தனியார் காணியைச் சுவீகரிக்கலாம்' என்றாலும் இராணுவத்துக்குத் தேவையான ஒன்றை 'பொதுத் தேவை' என அர்த்தப்படுத்த முடியாது என்று அவர் விளக்கினார்.
 
அதனைச் செவிமடுத்த நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு ஏற்று, எதிர் மனுதாரர்களுக்கு அழைப்பாணை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila