எதிர்க்கட்சியினருக்கு எதிராக சேறு பூசும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ராஜித குற்றச்சாட்டு
எதிர்க்கட்சியினருக்கு எதிராக சேறு பூசும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து போலியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பாரியளவில் பணத்தை வைப்புச் செய்து, அந்தப் பணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் பணம் வழங்கியதாக பிரச்சாரம் செய்ய முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் சமூகத்தின் அனுசரணையுடன் எதிர்க்கட்சியினர் தேர்தலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்த முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் திருமணம் முடித்துள்ளதாகவும் சிலர் பிரச்சாரம் செய்ய முயற்சி எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரதன தேரரின் மனைவி வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாகவும் போலி டி.என்.ஏ அறிக்கை ஒன்றின் மூலம் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட உள்ளது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.